தென்கொரியா நாட்டைச் சார்ந்த முதியவர் ஒருவர் ஆயிரம் தெரு நாய்களை கொன்று குவித்த சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தென்கொரியா நாட்டின் ஜியோங்கி மாகாணத்தில் தான் இந்தக் கொடூர சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அந்த மாகாணத்தில் உள்ள யாங்பியோங்கி நகரில் உள்ளுறை சார்ந்த ஒரு நபர் தான் வளர்த்த நாயை காணவில்லை என ஒரு பகுதியில் தேடிக் கொண்டிருந்தபோது அப்பகுதி முழுவதும் இறந்த நாய்களின் சிதைந்த உடல்கள் இருப்பதை கண்டிருக்கிறார். மேலும் சாக்குப்பைகளில் நாய்களின் உடல் அடக்கி வைக்கப்பட்டு இருப்பதையும் பார்த்து அவர் அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு உடனடியாக தகவல் கொடுத்தார்.
இதன் பேரில் அப்போதைக்குச் சென்று சோதனையிட்ட காவல்துறையினர் இது தொடர்பாக 60 வயது முதியவர் ஒருவரை கைது செய்து இருக்கின்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இனப்பெருக்க வயதை கடந்த மற்றும் அதிக விலை போகாத நாய்களை அதன் உரிமையாளர்களிடமிருந்து குறைவான விலைக்கு வாங்கி தான் அழிப்பதற்காக பயன்படுத்தி இருக்கிறார். தெரு நாய்களை பராமரிப்பதற்கான ஊதியமாக ஒரு நாய்க்கு இந்திய ரூபாய் மதிப்பில் 600 முதல் 800 ரூபாய் வரை 2020 ஆம் ஆண்டு முதல் பெற்று வந்திருக்கிறார். ஆயினும் நாய்களுக்கு உணவளிக்காமல் அவற்றை பட்டினி போட்டு சாகடித்து இருப்பது விசாரணையில் தெரிந்திருக்கிறது. தென்கொரிய நாட்டு சட்டப்படி வளர்ப்பு பிராணிகளை அதை செய்தால்
மூன்று வருட சிறை தண்டனை முதல் பல மில்லியன்கள் அபராதமாக செலுத்த வேண்டும். தற்போது இந்த முதியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.