கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள அடவி சாமிபுரம் கிராமம் அருகே உள்ள கிரஷர் பகுதியில் வெங்கடேசன், மோகன் உள்ளிட்ட 6️ பேர் மது அருந்தி உள்ளனர். அப்போது குடிபோதையில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வெங்கடேசனை மோகன் என்பவர் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவானார்.இந்த சூழ்நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெங்கடேசனை அருகில் இருந்த நபர்கள் மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். குடிபோறையில் கத்தியால் குத்திய மோகன் என்பவர் தலைமறைவான நிலையில், கெலமங்கலம் காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகிறார்கள் தகராறு கொலையில் முடிந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.