fbpx

“இது புதுசா இருக்கே….”! பெற்றோருக்கு பயந்து, பொய் பாலியல் புகார் கூறிய சிறுமி! பிளேடால் கையை அறுத்தது ஏன்?? காவல்துறை விளக்கம்!

தேர்வை சரியாக எழுதாததால் பெற்றோர்கள் திட்டுவார்கள் என அஞ்சி சிறுமி பொய்யான பாலியல் புகார் கூறிய சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லியைச் சார்ந்த 14 வயது சிறுமி ஒருவர் சமூக அறிவியல் தேர்வு சரியாக எழுதாததால் தனது பெற்றோர்கள் கண்டிப்பார்கள் என பயந்து தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக பொய் புகார்களை இட்டுக் கட்டி கூறியுள்ளார். தற்போது சிறுமி தான் பொய் சொன்னதை ஒப்புக்கொண்ட நிலையில் காவல்துறை போச்சோ வழக்குகளை வாபஸ் பெற்றது. இச்சம்பவம் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் நடந்துள்ளது. டெல்லியின் வடகிழக்கு பகுதியான பஜன்புறா காவல் நிலையத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சிறுமி ஒருவர் தான் பள்ளியிலிருந்து வரும்போது தன்னுடன் வந்த மூன்று சிறுவர்கள் தன்னை சில மீட்டர் தூரம் இழுத்துச் சென்று தனது கைகளை காயப்படுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார். அவரது கையிலும் பிளேடால் கீறிய காயங்கள் இருந்தன. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த நாங்கள் விசாரணையை தொடங்கினோம். அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சிறுமி தனியாக சுற்றி தெரிவதையே காண முடிந்தது. இது தொடர்பாக காவல் நிலையத்தின் பெண் காவலர்கள் சிறுமியுடன் பேசினார்கள். இதனைத் தொடர்ந்து சிறுமி கடந்த மார்ச் 16ஆம் தேதி உண்மையை ஒப்புக்கொண்டதாக காவல்துறை கமிஷனர் தெரிவித்துள்ளார். தேர்வு சரியாக எழுதாததால் தனது பெற்றோருக்கு பயந்து கடையில் தின்பண்டங்கள் வாங்கும் போது அவற்றுடன் பிளேடையும் சேர்த்து வாங்கி தனது கைகளை தானே அறுத்து இருக்கிறார் அந்த சிறுமி. இந்த உண்மையையும் அவர் ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து நீதிபதியின் முன்பு அவரது வாக்குமூலம் பெறப்பட்டு இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

Rupa

Next Post

தலைமறைவாக இருந்த குமரி பாதிரியார் அதிரடி கைது….! காவல்துறையினரின் அதிரடி….!

Tue Mar 21 , 2023
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆண்ட்ரோ (29) கிறிஸ்துவ பாதிரியாரான இவர் அழகிய மண்டபம் அருகே பிலாங்கரையில் இருக்கின்ற தேவாலயம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவர் தேவாலயத்திற்கு வருகை தரும் இளம் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவ தொடங்கினர். மாணவி ஒருவர் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் வழங்கியிருந்தார். இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு அந்த […]
இதுக்கா இப்படியொரு தண்டனை...மகனுக்கு சூடு போட்டு; கண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூர தாய்...கேரளாவில் பயங்கரம்!

You May Like