ChatGPT என்பது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மென்பொருளாகும்.. சமீப காலமாக இந்த ChatGPT உலகளவில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.. நாம் கூகுளில் ஒரு விஷயத்தை பற்றி தேடினால், அதை பற்றி பல்வேறு ஆப்ஷன்கள் நமக்கு கிடைக்கும்.. ஆனால் இந்த ChatGPT மூலம் தேடினால், நாம் என்ன தேடுகிறோமோ அதை பற்றிய விவரங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் ஆராய்ந்து, நமக்கு தேவையான சரியான விவரத்தை மட்டுமே வழங்கும்.. மேலும் ChatGPT-யின் சுவாரஸ்யமான பதில்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.. கவிதை, கட்டுரை தொடங்கி ChatGPT செயலி, MBA தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது. இதனால் குறுகிய காலத்திலேயே அதிகமானோர் இந்த ChatGPT செயலியை பயன்படுத்த தொடங்கி விட்டனர்..
![](https://1newsnation.com/wp-content/uploads/2023/02/To-be-sure-while-ChatGPT-has-north-of-100-million_1675933009556_1676513318038_1676513318038-1-1024x577.jpg)
1000-சொல் கட்டுரையாக இருந்தாலும், கணிதப் பிரச்சனையாக இருந்தாலும், கவர் லெட்டராக இருந்தாலும் சரி, குறியீடாக இருந்தாலும் சரி, ChatGPT ஆனது அனைத்திற்கும் பதில்களை அளித்து வருகிறது.. இதனிடையே Open AI நிறுவனம், ChatGPT-ன் GPT 4 என்ற புதிய அப்டேட்டையும் அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் கண்டறிய முடியாததை, ChatGPT செய்துள்ளது. ChatGPT ஏற்கனவே சில கடினமான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருப்பதால் இது ஆச்சரியமளிக்கவில்லை. நாயின் உரிமையாளர் கூப்பர் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ எனது செல்லப்பிராணியின் உடல்நிலையை கால்நடை மருத்துவரால் எவ்வாறு கண்டறிய முடியவில்லை..? ஆனால் நோய்வாய்ப்பட்ட எனது நாயின் அறிகுறிகளை நான் டைப் செய்தபோது, எனக்கு ChatGPT மூலம் சரியான தீர்வு வழங்கப்பட்டது..
எனது நாய் சாஸ்ஸி, ஆரம்பத்தில் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சைக்கு ஒத்துழைத்தது.. ஆனால் எனது நாயின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது.. பல கால்நடை மருத்துவர்களைக் கலந்தாலோசித்த போதிலும், நாய்க்கு என்ன பிரச்சனை என்பதை என்னால் சரியாக தெரிந்துகொள்ள முடியவில்லை முடியவில்லை, மேலும் சாஸ்ஸியின் நிலை எவ்வாறு முன்னேறியது என்பதைப் பொறுத்திருந்து பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
“#GPT4 என் நாயின் உயிரைக் காப்பாற்றியது. என் நாய்க்கு உண்ணி மூலம் பரவும் நோய் இருப்பது கண்டறியப்பட்ட பிறகு, கால்நடை மருத்துவர் அவளுக்கு முறையான சிகிச்சையைத் தொடங்கினார், மேலும் தீவிரமான இரத்த சோகை இருந்தபோதிலும், எனது நாயின் உடல்நிலை ஓரளவு முன்னேற்றம் அடைந்ததாகத் தோன்றியது. ஆனால் உடல் நிலை திடீரென மோசமடைந்தது.. பின்னர் எனது நாயின் இரத்தம் மற்றும் அறிகுறிகள் ஹீமோலிடிக் அனீமியாவை (IMHA) குறிக்கலாம் என்று GPT4 பரிந்துரைத்தது.
இந்த புதிய தகவலுடன், நான் மற்றொரு கால்நடை மருத்துவரைக் கலந்தாலோசித்தேன்.. அவர் GPT4ன் முன்கணிப்பை உறுதிப்படுத்தினார்.. எனது நாய் சாஸ்ஸிக்கு சரியான சிகிச்சையைத் தொடங்கினார். விரைவான நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கு நன்றி, சாஸ்ஸி கிட்டத்தட்ட முழுமையாக குணமடைந்துள்ளது..” என்று குறிப்பிட்டுள்ளார்…
கூப்பரின் அனுபவம் விலங்கு நோய்களை கண்டறிதல் மற்றும் சிகிச்சையில் GPT4 ன் திறனை எடுத்துக்காட்டுகிறது. சரியான நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கு உரிமம் பெற்ற கால்நடை மருத்துவரை அணுகுவது அவசியம் என்றாலும், கடினமான சந்தர்ப்பங்களில் கூடுதல் நுண்ணறிவு மற்றும் வழிகாட்டுதலை வழங்குவதில் இந்த GPT4 ஒரு மதிப்புமிக்க கருவியாக செயல்படும். தொழில்நுட்பம் தொடர்ந்து முன்னேறுவதால், கால்நடை மருத்துவத்தில் AIஇன் பங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,