தூத்துக்குடி அருகே உள்ள சில்லாநத்தம் பகுதியை சேர்ந்தவர் நல்ல தம்பி. இவர் இரு லாரிகளை வைத்து தொழில் செய்து வருகிறார். இத்தகைய நிலையில் அவருக்கு தொழிலில் 50 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆகவே கடனை அடைப்பதற்காக தன்னுடைய பூர்வீக வீட்டை விற்க அவர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு அவருடைய தம்பி முத்துராஜ் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார்.
ஆகவே இன்று அண்ணன் நல்ல தம்பி முத்துராஜ் மற்றும் அவருடைய உறவினர் முத்துராஜ் உள்ளிட்டோர் காரில் கிராமத்திற்கு சென்று பேசிக்கொள்ளலாம் என்று கூறிய அழைத்துச் சென்றுள்ளனர். தற்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் காரில் இருந்த நல்லதம்பி பண்டாரம் பட்டி காட்டுப்பகுதியில் தப்பி செல்ல முயற்சி செய்தார். அப்போது அவரை விரட்டிச் சென்ற தம்பி முத்துராஜ் மற்றும் உறவினர் முத்துராஜ் உள்ளிட்ட இருவரும் சேர்ந்து நல்ல தம்பியை தலையில் கம்பியால் கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் நல்ல தம்பியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். காவல்துறையை சேர்ந்தவர்கள் நடத்திய விசாரணையில், தப்பி சென்ற தம்பி முத்துராஜ் மற்றும் உறவினரான மற்றொரு முத்துராஜ் உள்ளிட்ட இருவரையும் புதிய முத்தூர் காவல்துறையினர் கைது செய்து சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கே காவல்துறையினர் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. அதோடு நல்லதம்பி இணையதளத்தின் மூலமாக சூதாட்டத்தில் பணத்தை இழந்ததாக சொல்லப்படுகிறது.