மதுரையில் சென்ற சில தினங்களாகவே வெளியே தலை காட்ட முடியாத அளவிற்கு வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. அதாவது மதுரை மாநகரில் 36 டிகிரி செல்சியஸில் இருந்து 41 டிகிரி செல்சியஸ் வரையில் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது இத்தகைய நிலையில், வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை மற்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மதுரையில் வெயில் வாட்டி வதைத்து வருவதால் வேலைக்கு செல்வோர் மற்றும் வெளியே செல்லும் நபர்கள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர். ஆனாலும் மாலை மற்றும் இரவு சமயங்களில் கடந்த 2 தினங்களாக சாரல் மழை பெய்தது.
இப்படியான சூழ்நிலையில்தான் நேற்று மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் பிறகு மதுரையில் உள்ள பல்வேறு புறநகர் பகுதிகளான கேகே நகர், அண்ணா நகர், மாட்டுத்தாவணி, சிம்மக்கல், கோரிப்பாளையம், பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளையம், முனிச்சாலை, ஜெய்ஹிந்த்ரம், வில்லாபுரம், சர்வேயர் காலனி, ஆழ்வார்புரம், எஸ் எஸ் காலனி, வண்டியூர், மேலமடை போன்ற பல்வேறு இடங்களில் சுமார் 1 மணி நேரமாக நிதி மின்னலுடன் கூடிய சூரை காற்று மழை கொட்டி தீர்த்தது.