கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் அந்த சிறுமியின் தந்தை மரணம் அடைந்தார். இதனால் அந்த சிறுமியின் தாயார் ஒரு பெயிண்டரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். மனைவி வெளியே சென்றிருந்த சமயத்தில் பெயிண்டர் தன்னுடைய வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொந்தரவு வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக வெளியே சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று அந்த சிறுமியை பெயிண்டர் மிரட்டியதாக கூறப்படுகிறது. ஆனாலும் இந்த விவகாரம் குறித்து சிறுமி தன்னுடைய தாயிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார்.
இதை கேட்ட தாய் அதிர்ச்சியில் உறைந்து போனார். மேலும் இந்த விவகாரம் குறித்து உடனடியாக துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் புகார் வழங்கினார். அந்த புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த பெயிண்டரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.