fbpx

100 நாள் வேலை திட்டம்…! புகார் தெரிவிக்க மாவட்ட வாரியாக மொபைல் எண்…! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம்‌ பிரிவு 27-ன்படி அனைத்து மாநிலங்களிலும்‌ குறைதீர்ப்பாளர்‌ நியமிக்கப்படுகின்றனர்‌. அதனடிப்படையில்‌ தமிழ்நாட்டில்‌ மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும்‌ ஒரு குூறைதீர்ப்பாளர்‌ பணி என 37 குறைதீர்ப்பாளர்கள்‌ நியமிக்கப்பட்‌டுள்ளனர்‌.

வேலைகோருதல்‌, ஊதியம்‌ அளித்தல்‌, ஊதியம்‌ தாமதமாக வழங்கியதற்குவழங்கப்படும்‌ இழப்பீடு, பணித்தள வசதிகள்‌ உள்ளிட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்‌டம்‌ தொடர்பாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்‌ திட்ட தொழிலாளர்கள்‌ மற்றும்‌ பொதுமக்களிடமிருந்து புகார்கள்‌, அலுவலகத்தில்‌ அல்லது களஆய்வின்‌ போது குறைகேள்‌ அலுவலரிடம்‌ பதிவு செய்யப்படலாம்‌ என தெரிவித்து கொள்ளப்படுகிறது.

விதி அல்லது சட்டம்‌ சம்பந்தப்பட்ட சிக்கலான கேள்விகள்‌ தவிர அனைத்து புகார்களும்‌, குறைகேள்‌ அலுவலரால்‌ புகார்‌ பெற்ற நாளிலிருந்து, 15 நாட்களுக்குள்‌ முடிக்கப்படுகிறது. மீதமுள்ள புகார்கள்‌ 6௦ நாட்களுக்குள்‌ முடிக்கப்படுகிறது. குறைகேள்‌ அலுவலரால்‌ குறைகள்‌ கையாளப்பட்ட விதம்‌, பணிகளின்‌ தரம்‌பற்றிய ஆய்வு மற்றும்‌ திட்ட செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள்‌ போன்றவை அறிக்கையாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்‌ திட்ட வலைதளத்தில்‌ வெளியிடப்படுகிறது.

37 மாவட்டங்களின்‌ குறைதீர்ப்பாளர்களின்‌ பெயர்கள்‌ மற்றும்‌ அவர்களுடைய கைப்பேசி எண்களின்‌ விவரம்‌ கீழ்கண்டவாறு தரப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஆஸ்துமா பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா?... அப்போ இதெல்லாம் சாப்பிடக்கூடாது!

Fri May 12 , 2023
ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். இன்று பெரும்பாலானோருக்கு ஆஸ்துமா பிரச்சனை காணப்படுகிறது. இந்த பிரச்னை உள்ளவர்கள் இருமல், மார்பில் இறுக்கம், மூச்சுத்திணறல், மூச்சுக்குழாய் குழாய்களின் வீக்கம் போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார். இந்தப் பிரச்சனைகளைத் தவிர்க்க சரியான உணவுப் பழக்கத்தைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியம்.ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் சாப்பிடுவதிலும், குடிப்பதிலும் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். சில […]

You May Like