நோட்…! நாடு முழுவதும் 8 முக்கிய உற்பத்தி துறைகளின் வளர்ச்சி விகிதம் அதிகரிப்பு…!

இந்தியாவில் 2023 ஏப்ரல் மாதத்தில் முந்தையை 2022 ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில், 8 முக்கிய உற்பத்தித் துறைகளின் வளர்ச்சி விகிதம் 3.5 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன் படி, உரம், எஃகு, சிமெண்ட், நிலக்கரி ஆகிய துறைகளின் உற்பத்தி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.


கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்புப் பொருட்கள், மின்சாரம் ஆகியவற்றின் உற்பத்தி சற்று சரிந்துள்ளது. நிலக்கரி உற்பத்தி முந்தைய ஆண்டைக் காட்டிலும் 9 சதவீதமும், உர உற்பத்தி 23.5 சதவீதமும், எஃகு உற்பத்தி 12.1 சதவீதமும், சிமெண்ட் உற்பத்தி 11.6 சதவீதமும் அதிகரித்துள்ளது.

மேலும் கச்சா எண்ணெய் உற்பத்தி 3.5 சதவீதமும், இயற்கை எரிவாயு உற்பத்தி 2.8 சதவீதமும், பெட்ரோலிய சுத்திகரிப்புப் பொருட்களின் உற்பத்தி 1.5 சதவீதமும், மின்னுற்பத்தி 1.4 சதவீதமும் குறைந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

அரசு சார்பில் காவல்துறை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு...! ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்...!

Fri Jun 2 , 2023
இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; காவல்துறையில் காலியாக உள்ள 621 உதவி ஆய்வாளர் பணியிடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் காலியாக உள்ள 129 நிலைய அதிகாரி பணியிடங்கள் ஆகியவற்றை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNUSRB) இத்தேர்வு நடத்தப்படும். இத்தேர்வுகளுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஜூன் 30-ம் தேதி […]
Tn Police

You May Like