நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வீடு திரும்பினார்.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டத்துறை மற்றும் சிறைத்துறை அமைச்சராக இருந்தவர் சி.வி.சண்முகம். இவர் ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் இருமுறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர். அதிமுக தலைவர்களில் மிக முக்கியமான தலைவர்களில் இவரும் ஒருவர். தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக (ராஜ்யசபா) பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நெஞ்சு வலி காரணமாக நேற்று இரவு 8.45மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய சிகிச்சை சம்பந்தமாக அனுமதிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவருக்கு விரிவான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் நிலை சீரானதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உடல் நலம் சீரானதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.