fbpx

வெறும் ரூ.99 இருந்தால் போதும்..!! உங்கள் ஃபோனையும் மழையில் நனைய விடலாம், தண்ணீரில் போட்டு விளையாடலாம்..!! எப்படி தெரியுமா..?

மழைக்காலம் வந்தாலே வெயிலில் இருந்து ஓரளவுக்கு நிவாரணம் கிடைக்கும். மழை பெய்தால், மரங்கள், செடிகளும் உயிர் பெறும். அதோடு மழையில் நனைவது மிகவும் வேடிக்கையான ஒன்று. ஆனால், பருவமழை காலத்தில் எங்கும் செல்ல முடியாது. இதுபோன்ற நிலையில், நீங்கள் வெளியில் செல்லும் போது, ​தொலைபேசியும் உங்களுடன் இருக்கும். அதனால் வெளியே செல்லும் போது போன் நனைந்து விடுமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது.

வெறும் ரூ.99 இருந்தால் போதும்..!! உங்கள் ஃபோனையும் மழையில் நனைய விடலாம், தண்ணீரில் போட்டு விளையாடலாம்..!! எப்படி தெரியுமா..?

உங்கள் ஃபோன் அதிக நீர் எதிர்ப்புத் திறன் கொண்டதாக இருந்தால், பிரச்சனை இல்லை. ஆனால், வாட்டர் ப்ரூஃப் இல்லை என்றால், சிக்கல் ஏற்படும். இதுபோன்ற சூழ்நிலையில், எந்த ஒரு போனையும் வெறும் 99 ரூபாய்க்கு வாட்டர் ப்ரூஃப் ஆக்க முடியும் என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா? ஆம், இந்த மழைக்காலத்தில், நனைந்தால் போன் பழுதாகிவிடும் என்று பயந்தால், போனுக்கு ஸ்பெஷல் துணை இருப்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். அதனால் ஃபோன் தண்ணீரில் விழுந்தாலும், நனைந்தாலும் ஒன்றும் ஆகாது. அதற்கு இ-காமர்ஸ் இணையதளங்களில் பல வகையான நீர்ப்புகா பைகள் அல்லது உலர் பைகள் உள்ளன. இவற்றின் விலை ரூ.99ல் தொடங்கி ரூ.300 வரை செல்கிறது.

இந்த பைகள் வெளிப்படையான பிளாஸ்டிக்குடன் வருகின்றன. போனை அதில் வைக்கும்போது அதன் தொடுதிரை டச் வேலை செய்யும். தண்ணீர், பனி, தூசி, மணல் மற்றும் அழுக்கு ஆகியவை தொலைபேசியில் விழுவதையும் இது தடுக்கும். இந்த பைகள் பல அடுக்குகளுடன் வருகின்றன, உங்கள் வசதிக்கேற்ப லாக் செய்துக் கொள்ளலாம். இருப்பினும், லாக் செய்யும்போது அவசரப்பட வேண்டாம். இதனால், உங்கள் தொலைபேசியின் பாதுகாப்பில் சிக்கல் எழும். இந்த ஃபோன் பைகள் நீண்ட பட்டையுடன் வருகின்றன, இதன் மூலம் உங்கள் கழுத்தில் மாட்டிக் கொள்ளலாம்.

Chella

Next Post

பெண்ணாக இருப்பது ஜாமீன் பெறுவதற்கான அளவுகோல் அல்ல!... கர்நாடக உயர்நீதிமன்றம்!

Thu Jul 6 , 2023
கணவரைக் கத்தியால் குத்திக் கொன்றதாகக் கூறப்படும் பெண்ணுக்கு ஜாமீன் வழங்க மறுத்த கர்நாடக உயர்நீதிமன்றம், ஜாமீன் வழங்குவதற்கான அளவுகோலாக பெண்ணாக கருத முடியாது என்று கூறியுள்ளது. திருமணத்துக்கு மீறிய சட்டவிரோத உறவை கேள்விக்குட்படுத்தியதற்காக கணவரின் கழுத்தை அறுத்ததாக மனைவி மனைவி டில்லி ராணி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட டில்லி ராணியின் மனுவை விசாரித்த நீதிபதி முகமது நவாஸ் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை வழங்கியது. சங்கர் ரெட்டி […]

You May Like