குடும்பம் என்று இருந்தால் நிச்சயம் பிரச்சனைகள் வரத்தான் செய்யும். ஆனால் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பதும், அந்த பிரச்சனையை உடனடியாக முடித்து வைப்பதும் குடும்ப தலைவர் மற்றும் தலைவியாக இருப்பவர்களின் கடமையாகும்.
ஆனால் குடும்பத்தில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, கணவனின் கழுத்தை செல்போன் சார்ஜர் ஒயரால் இறுக்கி கொடூரமான முறையில் துடிக்க, துடிக்க கொலை செய்த மனைவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகில் இருக்கின்ற கூத்தியார்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ்(34). இவருடைய மனைவி ஜெயா(26) இந்த தம்பதிகள் இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வருவது கணவன் மீது இருந்த கோபத்தால், அண்டை வீட்டு மாடியில் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்த சூழ்நிலையில்தான் திடீரென்று விபத்தில் சிக்கிய கணவரை பார்ப்பதற்காக வந்த மனைவி அவரிடம் நலம் விசாரித்த போது, மறுபடியும் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறி இருக்கிறது. இதனால் ஆத்திரத்தில் ஜெயா செல் போன் சார்ஜர் ஒயரை எடுத்து கணவரின் கழுத்தை இறுக்கி கொடூரமான முறையில் கொலை செய்திருக்கிறார்.
இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காளிதாஸ் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இந்த கொலை சம்பவம் குறித்து உயிரிழந்த காளிதாஸின் மனைவியான ஜெயாவை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.