தமிழக அரசு சார்பாக அரசு துறைகளில் பணியாற்றும் அரசு அலுவலர்களுக்கு பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு, அவர்களை அவ்வப்போது மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது தமிழக அரசு.
இதனால், தமிழக அரசின் ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். இப்படி பல்வேறு நன்மைகளை அரசு அதிகாரிகளுக்கு செய்வதால், அரசு பணிகளில் அவர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, அனைத்து வேலைகளும் குறித்த நேரத்தில் முடிப்பார்கள் என்பதே முதல்வரின் கணக்காக இருப்பதாக சொல்லப்படுகிறது.
அந்த வகையில், தமிழக அரசின் சார்பாக, போலீசாரின் வாரிசுகளுக்கு மாதாந்திர அடிப்படையில், கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரையில், அந்த கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வந்ததைவிட, இனிவரும் காலங்களில், கூடுதலான கல்வி உதவித் தொகையை அவர்கள் பெறுவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.
அந்த வகையில், காவலர்களின் வாரிசுகளுக்கு கூடுதல் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது அறிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் காவலர்களின் 100 குழந்தைகளுக்கு வருடத்திற்கு 25000 ரூபாய் வீதம் நான்கு வருடங்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
ஆனால் தற்போது காவலர்களின் வாரிசுகளாக இருக்கக்கூடிய மாணவர்களுக்கு, ஒரு வருடத்திற்கு 30,000 ரூபாய் உதவி தொகை வழங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 37 காவல் மாவட்டங்கள் மற்றும் 9 காவல் ஆணையரகங்களில் பணிபுரியும் 200 குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி உதவித்தொகைக்காக, கூடுதலாக, 2.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
கல்வி உதவித்தொகை மட்டுமல்லாமல், காவலர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் கல்வி பரிசு தொகையும் அதிகரிக்கப்பட்டு, 28.29 லட்சத்திலிருந்து 56.58 இலட்சமாக அதிகரிக்கப்பட்டு இருப்பதாக, முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.