கல்லீரல் மோசமாக இருப்பதற்கான 6 அறிகுறிகள் இவை தான்.. கவனிக்காம விட்ராதீங்க.. எச்சரிக்கும் நிபுணர்..

AA1FVp4U

Poor Liver Health Symptoms : கல்லீரல் நம் உடலின் மிகவும் முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். நச்சுகளை வடிகட்டுதல், செரிமானத்திற்கு உதவுதல் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பேணுதல் ஆகியவற்றில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், நம்மில் பலரும் கல்லீரல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் காவ்யா தனது பதிவில் கல்லீரல் ஆரோக்கியம் மோசமாக இருக்கலாம் என்பதற்கான 5 ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து குறிப்பிட்டுள்ளார்.


அவரின் பதிவில் “பெரும்பாலான மக்கள் உடலின் நுட்பமான அறிகுறிகளை புறக்கணிக்கிறார்கள், இது வெறும் “மன அழுத்தம்” அல்லது “வயது” என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்த ஆரம்ப அறிகுறிகள் உங்கள் கல்லீரல் மோசமான நிலையில் இருப்பதை குறிக்கலாம். அதாவது நச்சு நீக்கம், ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் வளர்சிதை மாற்ற சமநிலையை பராமரிக்க கல்லீரல் போராடுகிறது என்பதன் அறிகுறிகளாக இருக்கலாம். கல்லீரல் ஆரோக்கியம் மோசமாக இருப்பதற்கான அமைதியான ஆனால் ஆபத்தான அறிகுறிகளை அவர் குறிப்பிட்டுள்ளார். டாக்டர் காவ்யா சொன்ன 6 அறிகுறிகள் இதோ..

கல்லீரல் பாதிப்பின் 6 அறிகுறிகள்

வீக்கம் : தினமும் காலையில் வீக்கத்துடனோ அல்லது ஆற்றல் குறைவாகவோ உணர்ந்தால், குறிப்பாக குமட்டல் அல்லது குறிப்பிடத்தக்க பசியின்மை ஏற்பட்டால், உங்கள் கல்லீரல் சிறப்பாக செயல்படாமல் இருக்கலாம்.

பசியின்மை அல்லது அடிக்கடி குமட்டல் : தொடர்ந்து பசியின்மை இருப்பது. எந்தவொரு தெளிவான காரணமும் இல்லாமல் தொடர்ந்து உணவைத் தவிர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால் அல்லது குமட்டலை அனுபவித்தால், அது கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம்.

தொப்பை கொழுப்பு : திடீரென உடல் எடை அதிகரிப்பது, குறிப்பாக வயிற்றில் அதிக கொழுப்பு அல்லது தொப்பை இருப்பது, உங்கள் கல்லீரல் கொழுப்பை சரியாக வேலை செய்யவில்லை என்பதை குறிக்கலாம்.

கருமையான திட்டுகள் : உங்கள் முகம், கழுத்து அல்லது அக்குள் ஆகிய பகுதிகளில் கருமையான திட்டுகள் உள்ளதா? இது உங்கள் கல்லீரல் பிரச்சனையில் இருக்கிறது என்பதற்கான நேரடி சமிக்ஞையாக இருக்கலாம். இது கல்லீரல் அழுத்தத்துடன் தொடர்புடைய இன்சுலின் எதிர்ப்பின் பொதுவான அறிகுறியாகும்.

வயிற்றின் வலது பக்கத்தில் அசௌகரியம் : உங்கள் வயிற்றின் மேல் வலது பகுதியில் ஏதேனும் வலி அல்லது இறுக்கத்தை நீங்கள் கவனித்தால், அது கல்லீரல் வீக்கத்தைக் குறிக்கலாம்.

ஓய்வெடுத்தாலும் கூட நீங்காத சோர்வு

இரவு முழுவதும் நன்றாக தூங்கினாலும் அல்லது நீண்ட நேர ஓய்வெடுத்த பின்னரும் சோர்வாக உணர்கிறீர்களா? எதுவாக இருந்தாலும் உங்கள் ஆற்றல் அளவுகள் குறைவாக இருந்தால், உங்கள் கல்லீரல் மூல காரணமாக இருக்கலாம்,” என்று டாக்டர் காவ்யா குறிப்பிட்டுள்ளார்..

குறிப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, தொழில்முறை மருத்துவ ஆலோசனையாக இதனை கருதக்கூடாது. மருத்துவ நிலை குறித்த ஏதேனும் கேள்விகளுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்.

Read More : 21 நாட்களுக்கு தினமும் 10 ஆயிரம் அடிகள் நடந்தால் என்னென்ன நன்மைகள் தெரியுமா..?

English Summary

Let’s take a look at the silent but dangerous signs of poor liver health.

RUPA

Next Post

ஞானசேகரனின் CALL DETAILS என் கையில் இருக்கு.. அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு அந்த டைம்ல கால்..!! - அண்ணாமலை அடுக்கிய கேள்விகள்

Tue Jun 3 , 2025
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக முன்னாள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சென்னை அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதால், இந்த வழக்கு சென்னை […]
annamalai

You May Like