பெரியவர்கள் முதல், சிறியவர்கள் வரை பழங்கள் என்றால், விரும்பி உண்ணக்கூடிய ஒரு பொருளாக இருந்து வருகிறது. ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களை அதிக அளவில் சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி சாப்பிடுவது உண்டு.
அதேபோல, இது போன்று பழங்களை அதிகமாக சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். ஆகவே உடல் வெப்பத்தை தணிப்பதற்காகவே பலர் பழங்களை அதிகமாக உட்கொள்வார்கள்.
ஆனால், இப்படி அதிக அளவிலான பழங்களை சாப்பிடுவதால், உடலுக்கு எப்போதும் நன்மை கிடைத்து விடுமா? என்று தற்போது ஒரு சந்தேகம் எழுந்திருக்கிறது. அந்த சந்தேகத்திற்கான விடை தான் இந்த செய்தி குறிப்பு.
பெரும்பாலும் பழங்களில், விட்டமின்கள், தாதுக்கள், பொட்டாசியம் என்று பல்வேறு விதத்திலான சத்துக்கள் காணப்படுகிறது. நாள்தோறும் ஒரு பழத்தை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.
ஆனால், இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், பழங்களை அதிக அளவு சாப்பிட்டு வந்தால், பிரக்டோஸ் லிபோஜெனசிஸ் என்று சொல்லப்படும் செயல்பாடு கல்லீரலில் கொழுப்பை அதிகமாக்குகிறது என்றும் சொல்லப்படுகிறது. ஆகவே இப்படி கல்லீரலில் கொழுப்பு அதிகமானால், கல்லீரல் நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
பழங்களை அதிகமாக உண்பதால், அதிகரிக்கும் நீர் சத்து காரணமாக, வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. சில பழ வகைகளை அதிக அளவில் உட்கொண்டு வருவதால், வாயு மற்றும் ஏப்பம் குறித்த தொந்தரவுகள் உண்டாகலாம்.
நாளொன்றுக்கு, இரண்டு கப் பழங்களை சாப்பிடலாம் என்பது அமெரிக்க உணவு துறையின் பரிந்துரையாக இருக்கிறது. புரூட் சாலட்டுகள் உள்ளிட்டவை சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும். ஆனால், இந்த ஃப்ரூட் சாலட்டுகளை காலை நேரத்திலும், இரவுநேரத்திலும் சாப்பிடாமல் இருப்பது உடலுக்கு நல்லது என்று சொல்லப்படுகிறது.