நியாயம் வேண்டாமா..? வெறும் 180 மீட்டருக்கு ஓலா பைக் புக் செய்த பெண்..!! காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..

women book ola bike

ஒரு பெண் வெறும் 180 மீட்டர் தூரத்துக்காக ஓலா பைக் முன்பதிவு செய்த சம்பவம், சமூக வலைதளங்களில் பார்ப்போரை சிரிக்கவைக்கும் வகையில் வைரலாகியுள்ளது.


இந்த வீடியோவை @rohitvlogster என்ற இன்ஸ்டா பயனர் பகிர்ந்துள்ளார். வீடியோவில், ஓலா பைக் ஓட்டுநர் தனது பிக்அப் பாயிண்டில் வந்து OTP கேட்ட பிறகு, பயணத்தை துவங்கினார். ஓட்டுநர் அந்தப் பெண்ணிடம், “நீங்கள் சரியான இடத்தை தான் தேர்வு செய்துள்ளீர்களா.180 மீட்டருக்குத்தான் நீங்கள் ஓலா புக் பண்ணியிருக்கீங்க!” என்கிறபடி சிறிது குழப்பத்துடன் கேட்டார்.

அதற்கு அந்தப் பெண், “ஆம், அந்த இடத்தில்தான் இறக்க வேண்டும். ஏனெனில் அந்த இடம் வரைக்கும் நடந்து செல்லும் பாதையில் தெருநாய்கள் நிறைய இருக்கின்றன. நான் அவற்றை கடந்து செல்ல பயப்படுகிறேன். அதனால்தான் ஓலா புக் செய்தேன்” என்று சொன்னார்.

இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், குறுகிய தூரத்திற்கு ஒலா புக் செய்தாலும், அந்த பெண்ணிடன் கோபம் இல்லாமல், கிண்டல் செய்யாமல் தனது சிறந்த தொழில்முறை நடத்தையை காட்டினார். அந்த பெண் பயணத்தை முடித்ததும், ஓலா செயலியில் கட்டணம் ரூ.19 மட்டும் தான் என்று காட்டியது. அவர் அந்தப் பெண்ணை அவர் சொன்ன இடத்தில் இறக்கிவிட்டு, பயணத்தை அங்கிருந்தே நிறைவு செய்தார்.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமிலும், யூடியூபிலும் பார்த்த பலருக்கும் நகைச்சுவையாக தோன்றியது. இது வரை இந்த வீடியோக்கு 2.8 மில்லியன் பார்வைகள் மற்றும் 72.2K லைக்குகள் கிடைத்துள்ளன. ஒருவர், “பாதுகாப்பாக உணர வைக்கும் அந்த ஓட்டுநருக்கு நன்றி சகோதரரே!” என்றார். மற்றொருவர், “ஊசி போடுவதை விட ரூ.19 செலுத்துவதே மேல்!” என்று கிண்டலாக பதிலளித்தார்.

Read more: அய்யோ சிம்ரனா.. அந்தப் பொண்ணு கிளாமரா நடிப்பாங்க.. அவங்க வேண்டாம்..!! விஜய் சொன்ன விஷயம்.. போட்டு உடைத்த டைரக்டர்






Next Post

“ஓஹோ.. கல்யாணமே பண்ணிட்டாங்களா”..? வைரலாகும் ரவி மோகன் - கெனிஷாவின் திருமண புகைப்படம்..?

Thu Jun 5 , 2025
ஜெயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானர் ரவி மோகன். இவர் தந்தை மோகன் பிரபல தயாரிப்பாளர், இயக்குனர் என்று பல அவதாரம் எடுத்தவர். மேலும், ரவி மோகனின் அண்ணனும் ரவி மோகனை வைத்து பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஆனால், சமீப காலமாக ரவி மோகனுக்கு படங்கள் எதுவும் செட் ஆகவில்லை. அதே நேரத்தில், அவரின் குடும்பப் பிரச்சனையும் வெடித்தது. ரவி மோகன் ஆர்த்தியை […]
Ravi Mohan 2025

You May Like