சம்மரில் உங்க வீட்டின் கரண்ட் பில்லை குறைக்கணுமா? அப்ப கண்டிப்பா இந்த தவறுகளை செய்யாதீங்க..

ebbill1 down 1711184682

உங்கள் வீட்டின் மின் கட்டணத்தை குறைக்க உதவும் சில டிப்ஸ் குறித்து பார்க்கலாம்..

தற்போது அனைவரின் வீடுகளிலும் மின் பயன்பாடு அதிகரித்து வருவதால், மின் கட்டணமும் தாறுமாறாக அதிகரித்து வருகிறது.. அதுவும் இந்த கோடைகாலத்தில், ஏசி, மின்விசிறிகள் மற்றும் சமையலறை உபகரணங்களால் மின் கட்டணத்திற்கான செலவு மேலும் அதிகமாகிறது. இத்தகைய சூழலில் மின்சாரத்தை சேமிக்கவும், மின் கட்டணத்தை குறைக்கவும் நாம் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க வேண்டும். அந்த வகையில் உங்கள் வீட்டில் மின் கட்டணத்தை குறைக்க உதவும் சில டிப்ஸ் குறித்து பார்க்கலாம்..


தற்போதைய காலக்கட்டத்தில் ஏசி இல்லாத வீடுகள் மிக குறைவு.. ஆனால் ஏசி வாங்கும் போதே, இன்வெர்ட்டர் ஏசியை வாங்குவது நல்லது. இது சாதாரண ஏசியை விட குறைவான மின்சாரத்தை பயன்படுத்துகிறது. இதன் சிறப்பு என்னவென்றால், அறையின் வெப்பநிலைக்கு ஏற்ப அதன் கம்ப்ரசரின் வேகத்தை சரிசெய்கிறது, இது மின் நுகர்வைக் குறைக்கிறது. 5 ஸ்டார் மதிப்பீட்டைக் கொண்ட இன்வெர்ட்டர் ஏசிகள் இந்த கோடை வெயிலின் தாக்கத்தை உதவும் அதே நேரத்தில் மின் கட்டணத்தையும் குறைக்க உதவும்..

பெரும்பாலும் நமது வீடுகளில் மின் விசிறி ஓடிக்கொண்டே இருக்கும்.. ஆட்கள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி.. இந்தப் பழக்கம் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கிறது. எனவே நீங்கள் அறையில் இருக்கும்போது மட்டுமே மின்விசிறியை இயக்கவும், மோட்டார் சரியாக இயங்கும் வகையில் அதை தொடர்ந்து பராமரிக்கவும், இதனால் குறைந்த அளவிலேயே மின்சாரம் நுகரப்படும்.

மைக்ரோவேவ் போன்ற சாதனங்கள் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகின்றன, குறிப்பாக காத்திருப்பு பயன்முறையில் இருக்கும்போது. பயன்பாட்டிற்குப் பிறகு அவற்றின் மெயின் சுவிட்ச்-ஐ ஆஃப் செய்து விடுங்கள். இதன் மூலம் கணிசமாக மின் கட்டணத்தை குறைக்கலாம்.

மின் கட்டணத்தை குறைக்க விரும்பினால் பழைய மின்சாரம் பயன்படுத்தும் பல்புகள் மற்றும் சாதனங்களுக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் இது தான்.. LED பல்புகள், 5 ஸ்டார் மதிப்பீடு பெற்ற குளிர்சாதன பெட்டிகள் மற்றும் ஸ்மார்ட் வாஷிங் மெஷின்கள் போன்ற சாதனங்கள் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ரூபாய்களை மிச்சப்படுத்தும்.

தொலைபேசி சார்ஜரின் சுவிட்ச்சை ஆஃப் செய்யாமல் இருப்பது, டிவியை ரிமோட்டில் ஆஃப் செய்து விட்டு, மெயின் சுவிட்சை ஆஃப் செய்யாமல் வைத்திருப்பது அல்லது பகலில் தேவையற்ற விளக்குகளை எரிய வைப்பது போன்ற சிறிய விஷயங்கள் அனைத்தும் சேர்ந்து மின் கட்டணம் அதிகரிக்க காரணமாகின்றன. எனவே கொஞ்சம் எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருந்தால் உங்கள் மாதாந்திர மின்சார கட்டணத்தை பெருமளவில் குறைக்கலாம்.

Read More : குட் நியூஸ்..!! தங்க நகைக்கடன் தொடர்பாக ஆர்பிஐ விதித்த கட்டுப்பாடுகள் ரத்து..? ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா பரபரப்பு அறிவிப்பு..!!

RUPA

Next Post

வெந்தைய தண்ணீர் குடித்தால் சர்க்கரை நோய் வராதா..? செலவே இல்லாத இந்த சிகிச்சை பற்றி தெரிஞ்சுக்கோங்க..

Fri Jun 6 , 2025
இரத்த சர்க்கரை அளவுகள் அமைதியாக உயர்கின்றன. இந்த அளவுகள் இயல்பை விட உயர்ந்தால், அவை சோர்வு மற்றும் டைப் 2 நீரிழிவு போன்ற நீண்டகால பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இருப்பினும், நம்பிக்கைக்குரிய விஷயம் என்னவென்றால், சில குறிப்பிட்ட உணவுகளை தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்த அளவுகளை சமநிலைப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் நீரிழிவு நோய்க்கு எதிரான பாதுகாப்பாகவும் மாறும். இந்த உணவுகளை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். எதிர்காலத்தில் நீரிழிவு நோய் […]
fenugreek 1

You May Like