இன்றைய அவசரமான வாழ்க்கை சூழலில், உடனடியாக கிடைக்கும் உணவுகளையே மக்கள் அதிகமாக தேர்வு செய்கிறார்கள். இது உண்மைதான். பள்ளி முடித்து மாலையில் வீடு திரும்பும் குழந்தைகளுக்கு ராகி கூழ், உளுந்து கஞ்சி போன்ற பாரம்பரிய சத்தான உணவுகளை தினமும் தயாரித்து கொடுப்பது பலருக்கு சாத்தியமாக இல்லாமல் போகிறது.
இதனால், கடைகளில் எளிதாக கிடைக்கும் இன்ஸ்டன்ட் பவுடர்கள் மற்றும் கலவைகள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவற்றில் சுவை, நிறம், இனிப்பு ஆகியவற்றிற்காக சேர்க்கப்படும் சில சேர்க்கைகள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மறைமுகமாக பாதிக்கக்கூடும். அதே நேரத்தில், இயற்கையான ஊட்டச்சத்து முழுமையாக கிடைக்காத நிலையும் உருவாகிறது.
இதற்கான மாற்றாக, வீட்டிலேயே எளிய முறையில் சத்தான புரோட்டீன் பவுடரை தயாரித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதனால் தேவையற்ற ரசாயனங்கள் தவிர்க்கப்படுவதோடு, இயற்கையான ஊட்டச்சத்தும் உறுதியாக கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க இது ஒரு சிறந்த மற்றும் பாதுகாப்பான வழியாக இருக்கும்.
வறுத்த கடலை (பொட்டுக்கடலை) அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் சத்து மாவு, பாரம்பரிய உணவுப் பழக்கங்களில் இருந்து வந்த ஒரு ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். உடலுக்கு தேவையான சக்தி, ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை ஒருங்கே வழங்கும் தன்மை இதன் முக்கிய சிறப்பாகும்.
சத்து மாவு என்பது பொதுவாக வறுத்த கடலையை அரைத்து தயாரிக்கப்படும் ஒரு ஆரோக்கியப் பொடி ஆகும். இது தென்னிந்தியா மற்றும் வடஇந்தியாவின் பல பகுதிகளில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சில மாநிலங்களில் இது தினசரி உணவில் பானமாகவும் சேர்க்கப்படுகிறது.
இன்றைய காலத்தில், கடலையுடன் கோதுமை, ஓட்ஸ், பார்லி, ராகி போன்ற தானியங்களை கலந்து தயாரிக்கப்படும் மல்டிகிரைன் சத்து மாவுகளும் அதிகமாக கிடைக்கின்றன. இதனால் இதன் ஊட்டச்சத்து மதிப்பு மேலும் உயர்கிறது.
சத்து மாவில் புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற முக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள கார்போஹைட்ரேட் மெதுவாக ஆற்றலாக மாறுவதால், நீண்ட நேரம் சக்தி தரும் தன்மை உள்ளது. குறைந்த கிளைசெமிக் குறியீடு காரணமாக, இரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்காமல் கட்டுப்படுத்த உதவுகிறது.
காலை நேரத்தில் சத்து மாவு பானம் குடிப்பது நாள் முழுவதும் தேவையான ஆற்றலை வழங்குகிறது. இது சோர்வை குறைத்து, உடல் மற்றும் மன உற்சாகத்தை அதிகரிக்க உதவுகிறது. உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு இது இயற்கையான ஆற்றல் மூலமாக கருதப்படுகிறது.
சத்து மாவில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவலாம். இதனால் இதய ஆரோக்கியத்திற்கு ஆதரவாக இருக்கும். குறைந்த கிளைசெமிக் குறியீடு காரணமாக, இரத்த சர்க்கரை திடீரென உயர்வதை தடுக்கும் தன்மை உள்ளது. இதனால் சிலருக்கு இது மாற்று உணவாக பயன்படலாம். உடலின் நச்சுகளை வெளியேற்ற உதவுவதால், சருமம் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்க உதவுகிறது. முகப்பரு போன்ற பிரச்சினைகள் குறையவும் வாய்ப்பு உள்ளது.
எடை குறைக்க: சத்து மாவு + நீர் + சீரகப் பொடி + சிறிது உப்பு + எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். எடை அதிகரிக்க: சத்து மாவு + பால் + தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்.
Also Read: அட நம்ம விஜய் கூட நடிச்சவங்களா இவங்க? அடையாளமே தெரியாமல் மாறிய 90ஸ் க்ரஷ்!



