திருவையாறு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரின் இல்ல திருமணவிழாவில் பங்கேற்று மணமக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார். இதன்பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் நீதியன்றம், உச்ச நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சாவூரில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர். இந்தியாவில் சுயமரியாதை திருமணங்களை முதலில் அங்கீகரித்தது தமிழ்நாடு தான் என பெருமிதத்தோடு கூறினார். மேலும் பெற்றோகள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். அவர் பேசிய முக்கிய கருத்துக்கள் பின்வருமாறு..
சீர்திருத்த திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்று தந்தவர் பேரறிஞர் அண்ணா. நாட்டிலேயே சீர்திருத்த திருமணங்களை சட்டப்படி செல்லுபடியாக்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு தான். ஒரு திட்டம் தொடங்கப்படுவதை விட அது முழுமையாக மக்களிடம் போய் சென்றடைவது தான் மகிழ்ச்சி என்றார்.
தமிழ் மொழிக்கு செம்மொழி என்ற அந்தஸ்தை பெற்றுத்தந்தவர் கலைஞர் கருணாநிதி. உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் தமிழ் ஒலிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என தொடர்ந்து கோருகிறோம். குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Read more: மனிதர்களே கிடையாது.. பஸ் ஸ்டாப் முதல் டீ கடை வரை மனித பொம்மைகள் வாழும் அதிசய கிராமம்..!!