2024 மக்களவைத் தேர்தலை எதிர்நோக்கி பல அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. ஆளும் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் இந்தியா(INDIA) கூட்டணி உருவாக்கி கள வேலைகளை தொடங்கியுள்ளனர் எதிர்க்கட்சிகள். தமிழகத்தை பொறுத்தவரை ஆளும் திமுக அரசு மண்டலவாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டங்களை நடத்தி காய்களை நகர்த்தி வருகிறது. ஒருபுறம் தன்னுடைய பலத்தை நிரூபிக்க எடப்பாடி தலைமையிலான அதிமுக, மதுரையே திணறடிக்கும் விதமாக இன்று மாநாட்டை நடத்தி வருகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். மற்ற கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கி உள்ளது. இந்நிலையில் அதிமுகவில் இருந்து பிரிந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அணியும், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவும் இணைந்து 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் மக்களவை தேர்தல் குறித்து ஓபிஎஸ்-க்கும், அமமுக பொது செயலாளர் தினகரனுக்கும் பாஜக மேலிடம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பாஜக தேர்தல் கூட்டணியில் ஓபிஎஸ் அணியையும், அமமுகவையும் சேர்த்துக் கொள்ளலாம் என திட்டமிட்டிருந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் எடப்பாடி தலைமையிலான அதிமுக இதை ஏற்கவில்லை என்பதால் ஓபிஎஸ் அணியையும், அமமுகவையும் இன்னும் கூட்டணியில் பாஜக சேர்த்துக்கொள்ளவில்லை.
இருந்தாலும் தென் மாவட்டங்களில் செல்வாக்கு இருக்கும் ஓபிஎஸ், தினகரன் இவர்கள் இருவரும் சேர்ந்து தேர்தலில் களமிறங்கினாள் நன்றாக இருக்கு என்ற உளவுத்துறை தகவல் காரணமாக தினகரனையும், ஓபிஎஸ் மகனையும் தாமரை சின்னத்தில் போட்டியிட வைக்க பாஜக அரசு திட்டமிட்டது, இதற்கும் எடப்பாடி விட்டுக்கொடுக்கவில்லை. 2 சீட்டுக்கு ஆசைப்பட்டு அதிமுக கூட்டணியை விடமுடியாது என்று முடிவெடுத்தது பாஜக அரசு. இருந்தாலும் தென் மாவட்டங்களில் செல்வாக்கு இருக்கும் ஓபிஎஸ், தினகரன் இவர்கள் இருவரும் சேர்ந்து தேர்தலில் களமிறங்கினால் அதிமுக பாஜக கூட்டணியின் வாக்குகள் பிரியும் என்று யோசித்த பாஜக டெல்லி மேலிடம் ஓபிஎஸ்க்கும், தினகரனுக்கும் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அது என்னவென்றால் வரும் மக்களவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியை ஆதாரியுங்கள், உங்கள் கட்சிகள் போட்டியிட வேண்டாம், அதற்கு பதிலாக சட்டமன்ற தேர்தலை போட்டியிட்டு கொள்ளுங்கள் என்று கூறியுள்ளதாகவும், இந்த தகவலை கேட்ட ஓபிஎஸ் மற்றும் தினகரன் இருவரும் என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவின் நிலைப்பாடு குறித்து இருவருமே தீவிர ஆலோசனை நடத்தி உள்ளனர். தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும், பாஜக-வின் பேச்சை கேட்டுதான் இந்த நிலைக்கு ஆளாகியிருக்கிறோம், கட்டாயம் மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டும் என இருவருமே உறுதியாக உள்ளார்களாம். பாஜக மேலிடத்தின் இந்த அதிரடி உத்தரவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருந்தாலும் ஓபிஎஸ் தலைமையில் மாநாடு நடத்த தீவிரம் காட்டி வருகிறார் எனவும், அந்த மாநாட்டில் தான், ஓபிஎஸ் 2024 தேர்தலில் களமிறங்குவாரா என்பது குறித்து தெரியும். ஒருவேளை ஓபிஎஸ், தினகரன் இருவரும் சேர்ந்து தேர்தலை சந்திக்கும் பட்சத்தில் பாஜக மேலிடம் சார்பில் அழுத்தம் தரப்படும் என்று கூறப்படுகிறது.