Alert: 50 கி.மீ வேகத்தில் பலத்த தரை காற்றுடன் மழைக்கு வாய்ப்பு…! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…!

rain 1

தமிழகத்தில் இன்று பலத்த தரைக்காற்றுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின்ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும். தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இன்றும் நாளையும் 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.


சென்னை மற்றும் புறநகரில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள், மத்திய வங்கக்கடலின் அநேக பகுதிகள், அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு, வடக்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு, வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகள், குஜராத், கொங்கன், கோவா, கர்நாடகா கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read more: புதிய கீதை முதல் THE GOAT வரை.. விஜயின் படங்கள் சந்தித்த சர்ச்சைகளும்.. வெளியீட்டில் எழுந்த சிக்கல்களும் ஒரு பார்வை..!!

Vignesh

Next Post

IND vs ENG| முதல் டெஸ்டில் இந்தியா தோல்வி!. பயிற்சியாளர் கம்பீர் அதிரடி மாற்றம்?. வெளியான தகவல்!.

Wed Jun 25 , 2025
லீட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. இங்கிலாந்து வெற்றி பெற 371 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பென் டக்கெட்டின் 149 ரன்களின் அற்புதமான சதத்தின் அடிப்படையில், இங்கிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், இங்கிலாந்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து […]
eng test india loss gambir 11zon

You May Like