“ஏங்கக.. கூமாபட்டி தனி ஐலேண்டுங்க…!!” திடீரென ட்ரெண்ட் ஆன கிராமம்.. படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்..!! எங்க இருக்கு தெரியுமா..?

koomapatti 2 2025 06 25 13 37 14 1

“ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் வேண்டாம்.. நம்ம ஊரு கூமாபட்டிக்கு வாங்க!” என இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு ரீல்ஸ் வீடியோவால், தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமமான கூமாபட்டி உலக அளவில் கவனம் பெற்றிருக்கிறது.


தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம் தான் கூமாபட்டி. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கூமாபட்டி சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த ஊருக்கு அருகில் பிளவக்கல் அணை உள்ளது. அழகான, இயற்கை சூழல் நிறைந்த கிராமம் தான் கூமாபட்டி.

இந்த கிராமத்தின் சிறப்புகள் பற்றி ஒருவர் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்களால் இணையத்தில் கூமாபட்டி ட்ரெண்ட் ஆகி வருகிறது. “ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் போக வேண்டாம்.. நம்ம ஊரு கூமாபட்டிக்கு வாங்க.. சொர்க்க பூமிங்க.. தண்ணிய பாருங்க.. ஏங்க சர்பத் மாதிரி, பவண்டோ, செவன்-அப் மாதிரி இருக்குங்க.. தென் மாவட்டத்தில் கூமாபட்டி தனி ஐலேண்டு” என ஒருவர் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார்.

“தமிழ்நாட்டிலேயே ஏன்.. உலகத்துலயே இந்த மாதிரி ஊர் இல்லைங்க.. உங்களுக்கு லவ் ஃபெயிலியரா? 4 குழந்தை பெற்றும் வாழ்க்கை சந்தோஷமா இல்லையா? கவலைப்படாதீங்க.. கூமாபட்டிக்கு வாங்க.. இந்த தண்ணில குளிச்சு பாருங்க.. எந்த வியாதியும் வராது. சொர்க்க பூமிங்க இது” என நகைச்சுவை பாணியில் பேசி வீடியோக்களை வெளியிட்டு வந்தார் ஒருவர்.

இந்த வீடியோக்கள் வைரலாகிய நிலையில், இன்ஸ்டா Vloggers, யூடியூப் கிரியேட்டர்கள் உள்ளிட்ட பலரும் கூமாபட்டிக்கு நேரில் சென்று காட்சிகளை பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர். #Koombapatti என்கிற ஹாஷ்டேக் பரவலாகப் பயன்படுகிறது. இந்த சிறு கிராமம் தான் இன்ஸ்டா ரீல்ஸ்களால் தற்போது பேமஸ் ஆகியுள்ளது.

கூமாபட்டி மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளதால், இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளைக் கொண்டுள்ளது. நகர வாழ்க்கை யின் பரபரப்பில் இருந்து விலகி, அமைதியான கிராமிய சூழலை விரும்புபவர்களை இந்த வீடியோக்கள் கவர்ந்துள்ளன.  இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் கூமாபட்டி கிராமத்திற்கு ஒரு புதிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது. இது எதிர்காலத்தில் அப்பகுதியின் சுற்றுலாத் துறைக்கும், உள்ளூர் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more: 13 ஆண்டுகளாக உயிரைக் கொடுத்து உழைத்தேன்… இனி விஜய் கட்சி வேண்டாம்..!! – கொடியை கிழித்து வீசிய தவெக நிர்வாகி

Next Post

அணு குண்டுகளால் கூட அழிக்க முடியாது!. உலகின் பாதுகாப்பான ஒரே கட்டிடம் இதுதான்!. 3ம் உலகப் போர் வெடித்தாலும் எதுவும் ஆகாது!.

Thu Jun 26 , 2025
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது. சமீபத்தில், அமெரிக்கா தனது B-2 குண்டுவீச்சு விமானம் மூலம் ஈரானின் அணுசக்தி தளங்களைத் தாக்கியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்தாலும், பதற்றம் குறைவதாகத் தெரியவில்லை. இத்தகைய சூழ்நிலையில், உலகம் ஒரு பெரிய போரின் விளிம்பில் இருப்பதாக நிபுணர்கள் கூறிவருகின்றனர். மேற்கத்திய நாடுகளில் மூன்றாம் உலகப் போர் பற்றி நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன. அழிவுகரமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் தங்களை எவ்வாறு […]
Safest building world 11zon

You May Like