நோவோ நார்டிஸ்க் (Novo Nordisk) நிறுவனம், உடல் எடை குறைக்கும் மருந்தான Wegovy (semaglutide)-வை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை (FDA) நான்கு ஆண்டுகளுக்கு முன் அனுமதி வழங்கியதும், அமெரிக்க நிறுவனமான, Eli Lilly நிறுவனம் தனது Mounjaro மருந்தை கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்தநிலையில், டென்மார்க்கைச் சேர்ந்த மருந்து நிறுவனமான நோவோ நார்டிஸ்க் (Novo Nordisk), உடல் எடையை குறைக்கும் மருந்தான Wegovy-யை (semaglutide அடிப்படையிலான GLP-1 சிகிச்சை) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
நோவோ நார்டிஸ்க் இந்தியாவின் நிர்வாக இயக்குனரும், நிறுவனத்தின் கார்ப்பரேட் வைஸ்பிரசிடென்டாகவும் உள்ள விக்ராந்த் ஷ்ரோத்ரியா (Vikrant Shrotriya) கூறியதாவது, 3,000க்கும் மேற்பட்ட இந்திய நோயாளிகளிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளைத் தொடர்ந்து, “நாங்கள் Wegovy மருந்தை இந்தியாவில் 0.25 mg, 0.5 mg, 1 mg, 1.7 mg மற்றும் 2.4 mg ஆகிய ஐந்து வலிமைகளில் வெளியிடுகிறோம்.
Wegovy மருந்தை அறிமுகப்படுத்தும் முடிவும், அதே வகை மருந்தான டைப் 2 நீரிழிவு நோய்க்கான “Ozempic”- என்ற ஊசியை இன்னும் அறிமுகப்படுத்தாததற்கான காரணமும், நோவோ நார்டிஸ்க் நிறுவனத்தின் இந்தியாவில் ஏற்கனவே உள்ள நீரிழிவு மருந்துத் துறையுடன் (diabetes franchise) தொடர்புடையது. இந்த நிறுவனம் 2022-ல் இந்தியாவில் வாய்வழி மருந்தை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, Wegovy ஊசியை இப்போது எடை குறைக்கும் நோக்கில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளனர்.
இந்த மருந்தை வாரத்திற்கு ஒரு முறை ஊசி மூலம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மருந்தின் ஆரம்ப விலை ₹17,345 லிருந்து தொடங்குகின்றது, அதிகபட்சமாக ₹26,015 வரை இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த மருந்து, பி.எம்.ஐ (BMI) 30 க்கும் மேற்பட்டவர்களுக்கும், 27 க்கும் மேற்பட்ட பி.எம்.ஐ உடையவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி இதனை பின்பற்றலாம் எனவும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இந்த மருந்தை எடுக்கக் கூடாது எனவும், இது நாள்பட்ட எடை மேலாண்மை மற்றும் முக்கியமான இருதய சம்பவங்களை குறைப்பதற்கான ஒரு தீர்வாக இருக்க முடியும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Readmore: ஆட்டோமொடிவ் பிரிவை மூடும் இன்டெல் நிறுவனம்.. பெரும்பாலான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு..