ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டம், இல்லாதூர் கிராமத்தை சேர்ந்தவர் 32 வயதான நிரோஷா. இவரது கணவர் திருவள்ளூர் மாவட்டம் மணவூரைச் சேர்ந்த 36 வயதான கார்த்திக். இருவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், இவர்களுக்கு தற்போது 10 வயதான மகன் மற்றும் 6 வயதான மகள் உள்ளனர். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நிரோஷா தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனியாக சென்று விட்டார். இப்போது அவர் தனது குழந்தைகளுடன் இல்லத்தூரில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஜூலை 08ம் தேதி நிரோஷா கழுத்தில் காயத்துடன் சடலமாக கிடந்துள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், விரைந்து வந்து நிரோஷாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், 27 வயதான நிரோஷாவின் தாய்மாமன் மகன் நாகராஜு என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நிரோஷாவுக்கும் நிரோஷாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. ஒருகட்டத்தில் நாகராஜு நிரோஷாவை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். ஆனால், நிரோஷா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
அது மட்டும் இல்லாமல், வேறொருவரை திருமணம் செய்யப்போவதாக கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த நாகராஜு, சம்பவத்தன்று நள்ளிரவு நிரோஷ்வின் வீட்டுக்குச் சென்று தூங்கிக் கொண்டிருந்த நிரோஷாவை ஹீட்டர் ஒயரால் கழுத்தை நெரித்துக்கொலை செய்துள்ளார். இதையடுத்து, போலீசார் நகராஜூவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read: “அடேய்… அது என் காதுடா!” வாடகைக்கு வீடு விடும் போட்டியில் காதைக் கடித்துக் குதறிய நபர்!



