பொது இடங்களில் மது… காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்…! அண்ணாமலை கோரிக்கை

Annamalai 2025 1

பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்க அனைத்து ஊர்களிலும் காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக அரசை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள காரத்தொழுவு அரசு உயர்நிலைப் பள்ளி அருகே, மது அருந்திய கும்பலைத் தட்டிக்கேட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் குலாம் தஸ்தகீர் மீது போதைக் கும்பல் பெட்ரோல் ஊற்றி தாக்குதல் நடத்தியிருக்கிறது. பொது இடங்களில் மது அருந்துபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மது விற்பனையில் பணம் வந்தால் போதும் என்ற திமுக அரசின் கட்டுப்பாடற்ற மது விற்பனையின் விளைவு, அரசுப் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்குச் சென்றிருக்கிறது.

அரசு அதிகாரிகள், காவல்துறையினர், பெண்கள், குழந்தைகள், முதியோர் என திமுக ஆட்சியின் கையாலாகா தனத்தால் யாருக்குமே பாதுகாப்பில்லை. அரசுப் பள்ளியின் உள்ளே நுழைந்து, ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி தாக்குதல் நடத்த முடிகிறது என்றால், திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு குப்பைக் கிடங்குக்கு சென்று விட்டது என்பதுதான் பொருள். ஆனால், இது எவை குறித்தும் கவலை இல்லாமல், நாளொரு வேஷமும், பொழுதொரு நாடகமும் நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் முழு நேரமாக நடிக்கச் செல்லலாம். ஆசிரியர் மீதான பெட்ரோல் தாக்குதல், கொலை முயற்சியாகவே கருதப்பட வேண்டும்.

உடனடியாக, அந்த சமூக விரோதிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுப்பதோடு, பொது இடங்களில் மது அருந்தப்படுவதைத் தடுக்க, ஒவ்வொரு ஊரிலும் காவல்துறை கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Read more: பாதியாக குறைந்த பூக்களின் விலை… விவசாயிகள் வேதனை!

Vignesh

Next Post

"அமெரிக்க அதிபர்களில், 4 பேர் படுகொலை!. இந்த பதவி காளை சவாரி செய்வதை விட ஆபத்தானது"!. டிரம்ப் பேச்சு!

Sat Jun 28 , 2025
தேர்தல் பிரச்சாரத்தின்போது துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்த அதிபர் டிரம்ப் , அமெரிக்க அதிபர் பதவி என்பது காளை சவாரி செய்வதை விட ஆபத்தான தொழில் என்று தெரிவித்துள்ளார். நாடு தழுவிய தடை உத்தரவுகளை பிறப்பிக்கும் கூட்டாட்சி நீதிமன்றங்களின் திறனைக் கட்டுப்படுத்தியதற்காகவும், பிறப்புரிமை குடியுரிமை உத்தரவு மற்றும் பிற நிர்வாக முடிவுகளை செயல்படுத்துவதில் அரசாங்கம் முன்னேற அனுமதித்ததற்காகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்தார். […]
trump 11zon

You May Like