மக்களின் செல்போன் எண்களை பெறவே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 2026 காண சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் பத்து மாதங்களே உள்ள நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், இன்றைய சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னதாக சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “திமுக ஆட்சியில் மக்கள் எந்த நன்மையும் பெறவில்லை. மக்கள் மனதில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. அவர்கள் திமுக அரசை அகற்ற விரும்புகிறார்கள். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ஊழல், அனைத்து துறைகளிலும் நிரம்பியுள்ளது. எனவே, மக்கள் தங்களாகவே மாற்றத்தை விரும்புகின்றனர்.” என்றார்.
திமுகவின் பிரச்சார யுத்தமான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தையும் கடுமையாக விமர்சித்த இபிஎஸ், “இது வெறும் விளம்பர நாடகம். நான்கு ஆண்டுகள் மக்கள் நலனில் கவனம் செலுத்தாத திமுக அரசு, தற்போது தேர்தலை முன்னிட்டு இத்திட்டத்தை ஊர் ஊராக எடுத்துச் செல்கிறது. மக்கள் செல்போன் எண்கள் கேட்கப்படுவதும், அதை திமுக ஐடி அணிக்கு கொடுக்கப்படுவதும் கேள்விக்குரியது,” என்றார்.
அண்மையில், அமித் ஷா ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெற்று பாஜக ஆட்சியில் பங்கு பெறும்” என்று கூறியிருந்தார். இந்தக் கருத்தைத் தொடர்ந்து, இபிஎஸ் அளித்த பதில் மேலும் கவனத்தை ஈர்த்தது. “தமிழகத்தில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அதிமுகதான் அரசியல் நடுவழியாக உருவாகிறது,” என்று அவர் வலியுறுத்தினார்.
தற்போது சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 8 மாதங்களே உள்ள நிலையில், பல கட்சிகள் எங்கள் அதிமுக கூட்டணியில் இணைய விரும்புகின்றன. இதன் மூலம் பலம் வாய்ந்த வெற்றி கூட்டணி உருவாகும், என இபிஎஸ் தெரிவித்தார். அதிமுக ஆட்சி அமைந்தவுடன், “திமுக செய்த ஊழல்களைப் பற்றிய விசாரணைகள் நடைபெறும். அனைத்து துறைகளிலும் கடந்த 4 ஆண்டுகளில் நடந்த ஊழலுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
Read more: உடல் எடையை குறைக்க தினமும் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்..? – அவசியம் தெரிஞ்சுக்கோங்க