வார இறுதி விடுமுறை.. 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்…! தமிழக அரசு அறிவிப்பு…!

bus 2025 5

வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி 1,035 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

வரும் 19, 20 தேதிகள் வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால் ஜூலை 18, 19 தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி,கோயம்புத்தூர், சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 705 பேருந்துகள் கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.


சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 110 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 1035 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்களில் பயணிக்க 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். ஞாயிறன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: பிறக்கும் குழந்தைகள் வெள்ளையாக இருந்தால் மரண தண்டனை.. வினோத வழக்கம் கொண்ட பழங்குடி மக்கள்..!!

Vignesh

Next Post

10 வயது சிறுமியை, வாயை மூடி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை..! அ.மலை வெளியிட்ட வீடியோ பதிவு

Thu Jul 17 , 2025
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, கடந்த சனிக்கிழமை அன்று, சாலையில் நடந்து சென்ற பத்து வயது சிறுமியை, வாயை மூடிக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, கடந்த சனிக்கிழமை அன்று, சாலையில் நடந்து சென்ற […]
a Malai 2025

You May Like