2026-ல் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது…! இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன் அறிவிப்பு…!

cpm mutharasan 2025

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியே வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றிபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்; அதிமுக பாஜகவுடன் உறவில் இருந்த நிலையில், இனி பாஜகவுடன் சேர போவதில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்தார். இப்போது மீண்டும் பாஜகவுடன் இணைந்திருக்கிறார். அப்படி இணையவேண்டிய கட்டாயம் என்ன? பாஜக – அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என திட்டவட்டமாக தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அந்த ஆட்சியின் அமைச்சரவையில் பாஜக பங்குபெறும் என்றும் கூறியிருக்கிறார்.

ஒரு திரைபடத்தில் நடிகர் வடிவேலு ரவுடிகளை போலீஸார் அழைத்து செல்லும்போது, நானும் ரவுடிதான் எனக்கூறி போலீஸ் வாகனத்தில் ஏறிக்கொள்வார். அதுபோல் பழனிசாமி, நான்தான் கூட்டணிக்கு தலைவர், நான்தான் முதல்வர் என்று தன்னைத்தானே அறிவித்துக் கொள்கிறார். பாஜக அவரை முதல்வர் வேட்பாளராக இதுவரை அறிவிக்கவில்லை. அமித் ஷாவும் கூறவில்லை. பாஜகவுடன் அதிமுக அணிசேர்ந்தது தவறு என்பதை அக்கட்சியினரே சொல்லி வருகின்றனர்.

சேரக்கூடாத இடத்தில் அதிமுக சேர்ந்திருக்கிறது. இது இயல்பாக அமைந்த கூட்டணி அல்ல. அப்படிப்பட்ட கூட்டணியில் இருந்து கொண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் கூட்டணிக்கு வருமாறு பழனிசாமி அழைக்கிறார். இது நகைப்புக்குரியது. அவரது அழைப்பை நிராகரிக்கிறோம். அவரது கூட்டணி வெற்றிபெறாது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியே வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றிபெறும் என்றார்.

Vignesh

Next Post

இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு...! கோவையில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்...!

Fri Jul 18 , 2025
கோவையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; “கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் மூலம் தனியார் நிறுவனங்களில் பணி புரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக் கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. ஜூலை 2025 மாதத்திற்கான சிறிய அளவிளான […]
Job 2025 3

You May Like