அதிமுக டூ திமுக.. திடீர் பல்டி அடித்த முக்கிய நிர்வாகிகள்.. செந்தில் பாலாஜி போடும் பலே கணக்கு..!! EPS ஷாக்..

eps senthil balaji

திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதற்கு பதிலடியாக அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பலர் இரவோடு இரவாக திமுகவில் இணைந்தனர்.


வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அனைத்து கட்சிகளும் களப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் தொகுதி பேரத்தை தொடங்கிய நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி தான் நிலைக்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின், கட்சியிலும் களையெடுக்கும் பணிகளை தொடங்கியுள்ளளார். தொடந்து கூட்டணி கட்சிகளுடனும் தொடர் ஆலோசனையில் இருந்து வருகிறார். நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக செந்தில்பாலாஜி கரூரில் முகாமிட்டு மாற்றுக் கட்சியினரை திமுகவுக்கு இழுத்து வருகிறார். அந்த வகையில் அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சியினர் சமீபத்தில் திமுகவில் இணைந்தனர். கூட்டணி கட்சியான மதிமுகவும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

கடந்த சில ஆண்டுகளாக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களை திமுகவில் இணைக்க திமுக தலைமை தயக்கம்காட்டி வந்தது. இந்தச் சூழலில், 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பல்லடம் தொகுதியில் மதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட முத்துரத்தினம், திருப்பூர் மாவட்டச் செயலாளர் ரமேஷ், மாவட்ட மதிமுக இளைஞரணி செயலாளர் ரவி ஆகியோரை திமுக சமீபத்தில் தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டது.

ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரையில் மாற்று கட்சியினரை திமுகவுக்கு இழுக்கும் செந்தில் பாலாஜியின் ஆட்டம் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளானது. குறிப்பாக மாற்றுக்கட்சியினர் மற்றும் புதியவர்களை இணைப்பதில் கரூர் தான் நம்பர்-1 ஆக இருக்கிறது. இந்த நிலையில் நேற்று இரவு அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பலர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

நேற்று திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதற்கு பதிலடியாக அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பலரை இரவோடு இரவாக திமுகவில் இணைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Read more: ராகு கேது பெயர்ச்சி: ஜூலை 20-க்கு பிறகு இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் தான்..!!

Next Post

உயரமான பகுதியில் ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பின் சோதனை வெற்றி...!

Fri Jul 18 , 2025
உயரமான பகுதியில் ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பின் சோதனை வெற்றிக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பின் உயரமான பகுதிகளில் இலக்குகளை தாக்கும் பரிசோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. லடாக்கில் நேற்று முன்தினம் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பை 4,500 மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்த முடியும். இது 25 முதல் 30 கிலோமீட்டர் தொலைவில் […]
aakash2025

You May Like