சீமான் மீது கொடுத்த வழக்கை நடிகை விஜயலட்சுமி வாபஸ் வாங்கியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சீமான் என்னைத் திருமணம் செய்துகொண்டார் என நடிகை விஜயலட்சுமி புகார் கூறி இருந்தார். நாங்கள் கணவன், மனைவியாக வாழ்ந்தோம். நான் 7 முறை கர்ப்பமானேன். ஆனால் என்னுடைய அனுமதியின்றி, மாத்திரை மூலம் கருச்சிதைவு செய்தார்.
தற்போது சீமான் கட்சியைச் சேர்ந்த மதுரை செல்வம் என்பவர் என்னை மிரட்டுகிறார். எனவே, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி புகார் ஒன்றை கொடுத்திருந்தார். இந்த வழக்கில் சீமானுக்கு இரண்டு முறை சமன் அனுப்பப்பட்டது. ஆனால் விசாரணைக்காக ஆஜராகவில்லை. இந்த நிலையில் சீமான் மீது எழுத்துப்பூர்வமாக புகார் மனு வாபஸ் வாங்கினார் நடிகை விஜயலட்சுமி பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் மீது எழுத்துப்பூர்வமாக புகார் மனு வாபஸ் வாங்கினார் நடிகை விஜயலட்சுமி. இந்த வழக்கை வாபஸ் பெற தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என கூறினார். புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை, தனி ஒருவராக போராட முடியவில்லை. சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை என கூறினார்.