ஒரணியி தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்கு ஓடிபி பெற தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து திமுக சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஓரணி தமிழ்நாடு என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கையை திமுக நடத்தி வருகிறது. இந்த உறுப்பினர் சேர்க்கையின் போது, ஆதார் எண்ணை பெற்று ஓடிபி பெறப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.. இது தனிமனித உரிமை மீறல் எனவும், சட்டவிரோதமாக ஆதார் விவரங்களை சேகரிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரபட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை நடத்தலாம், ஆனால் மக்களிடம் இருந்து ஓடிபி பெற இடைக்கால தடை வித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. டிஜிட்டல் முறையில் தனிநபர் தரவுகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன? ஓடிபி விவரங்களை கேட்க வேண்டாமென காவல்துறையினர் கூறும் நிலையில், எதற்காக ஆதார் விவரங்களை கேட்கிறார்கள்..
ஆதார் விவரங்களை சேகரிக்கும் தனியார் நிறுவனம் இதனை விற்பனை செய்தால் என்ன செய்வது? சேகரிக்கப்படும் விவரங்கள் எவ்வாறு கையாளப்படும் என்பது குறித்து திட்டங்கள் இல்லை.. வாக்காளர்களின் தனிநபர் விவரங்கள் பாதுகாக்கப்படுவது அவசியம்..” என்று நீதிபதிகள் தெரிவித்தனர். உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடையை எதிர்த்து திமுக சார்ப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் திமுக சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது என தெரிவித்த நீதிபதிகள், இடைக்கால தடையை நீக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்திலேயே மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
Read more: இளமையை நிரந்தரமாக தக்கவைக்க இந்த ஒரு ஜூஸ் போதும்..! நன்மைகள் தெரியுமா..?