திமுக கூட்டணியில் புதிய கட்சிகள்.. முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை…!

MK Stalin dmk 4

துணை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

துணை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் வைகோ, திருமாவளவன், கமல்ஹாசன், முத்தரசன், ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்கள் மற்றும் திமுக கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்துள்ளார்.


வேட்பாளருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

இந்தியா கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுதர்சன் ரெட்டிக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகள். நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயல்பட்டு, குடிமக்களின் உரிமைகள் மற்றும் சமூகநீதியை உயர்த்திப் பிடித்த நீதியரசராக விளங்கியவர். சுதந்திரமாகச் செயல்பட்டு, இந்திய மக்களாட்சியைப் பாதுகாக்க வேண்டிய தன்னாட்சி அமைப்புகள் அத்தனையும் பாஜகவின் துணை அமைப்புகளாக மாற்றப்பட்டு, அரசியலமைப்புச் சட்டமே ஆபத்தில் சிக்குண்டுள்ளது.

இத்தகைய சூழலில், இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளான மதச்சார்பின்மை, கூட்டாட்சியியல், சமூகநீதி மற்றும் வேற்றுமையில் ஒற்றுமையில் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட ஒருவரை ஆதரிப்பதுதான் நம்முன் உள்ள கடமை நீட் விலக்கு உள்ளிட்ட தமிழ்நாட்டின் நியாயமான பல கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல், ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்து வருகிறது. ஆளுநர்கள் மூலமாக இணை அரசாங்கம் நடத்தி, மாநில அரசுகளின் செயல்பாட்டை முடக்கி, உயர்கல்வி நிறுவனங்களை வலுவிழக்கச் செய்யும் செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது.

மாநில உரிமைகள் பறிப்பு, அதிகாரக்குவிப்பு, வெறுப்பு பிரசாரம் தீவிரமாக முன்னெடுப்பு, இடைவிடாத இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு என அரசியலமைப்பைக் குழிதோண்டிப் புதைக்கும் அநீதிகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திமுக தொடர்ந்து தீவிரமாகக் குரலெழுப்பி வருகிறது. மாநில உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் காக்க, மதநல்லிணக்க உணர்வு கொண்ட தமிழ்நாட்டு மக்கள் அடுத்தடுத்த தேர்தல்களில் தொடர்ந்து திமுக கூட்டணி எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கே வாக்களித்துள்ளனர்.

எனவே சுதர்சன் ரெட்டி ஆதரிப்பதுதான் அவர்களது முடிவுக்கும் உணர்வுக்கும் மதிப்பளிப்பதாக அமையும். அரசியலமைப்பு, பன்மைத்துவம், சமூகநீதி, மொழியுரிமைகள் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட ஜனநாயகவாதியாக, நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு இடமளித்து அவையில் எதிர்க்கட்சிகளின் குரல்களுக்கு வாய்ப்பளிக்க கூடியவராக சுதர்சன் ரெட்டி திகழ்கிறார். கூட்டாட்சியலுக்கு எதிரான போக்கு, எதேச்சாதிகாரம் மற்றும் வெறுப்புணர்வைப் பரப்புவது ஆகியவற்றை எதிர்த்து நிற்கக் கூடியவராக சுதர்சன் ரெட்டி மிகச் சரியான தேர்வு என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

பெரும் சோகம்!. லாரி மீது பேருந்து மோதியதில் 70க்கும் மேற்பட்டோர் பலி!. புலம்பெயந்தோரை ஏற்றிச் சென்றபோது நிகழ்ந்த பயங்கரம்!. பகீர் வீடியோ

Wed Aug 20 , 2025
மேற்கு ஆப்கானிஸ்தானில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பயணிகள் பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் 70க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஈரானில் இருந்து இருந்து புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு சென்றுக்கொண்டிருந்தது. அப்போது அதிவேகமாக சென்ற பேருந்து, லாரி மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி கோர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 70க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த […]
1557133 accident 2

You May Like