மாத தொடக்க நாளான இன்று கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.51.50 குறைந்துள்ளது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.1,738-க்கு விற்கப்படுகிறது. ஆனால், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் ரூ.868.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.இதன்படி, கடந்த சில மாதங்களாக உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. கரோனா பாதிப்பால் தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் முடங்கியுள்ளதால் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது.
இந்த நிலையில் மாத தொடக்க நாளான இன்று கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.51.50 குறைந்துள்ளது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.1,738-க்கு விற்கப்படுகிறது. ஆனால், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் ரூ.868.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.