வைகை ஆற்றில் “உங்களுடன் ஸ்டாலின்” மனுக்கள் மிதந்த விவகாரம்…! ஒருவர் அதிரடியாக கைது…!

vaigai 2025

வைகை ஆற்றில் மனுக்கள் மிதந்த விவகாரம் தொடர்பாக நில அளவை துறை உதவி வரைவாளர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் ஆக. 29-ம் தேதி காலை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள் மிதந்தன. இதுகுறித்து சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார் விசாரணை நடத்தினார். அதனடிப்படையில், திருப்புவனம் வட்டாட்சியர் விஜயகுமார் இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், அலட்சியமாகப் பணிபுரிந்த 7 அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவைப் பிரிவில் பராமரிக்கப்பட்டு வந்த 13 பட்டா மாறுதல் தொடர்பான மனுக்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக, வட்டாட்சியர் விஜயகுமார் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், திருப்புவனம் போலீஸார் வழக்குப்பதிந்தனர். வட்டாட்சியர் அலுவலகத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால், மனுக்களை திருடிய நபரைக் கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டது.

இதனிடையே, திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலக நில அளவைப் பிரிவில் பணிபுரியும் முதுநிலை வரைவாளர் சரவணனுக்கு 17 ‘பி’-ன் கீழ் நடவடிக்கை எடுக்கவும், அவுட்சோர்சிங்கில் பணிபுரியும் புல உதவியாளர் அழகுப்பாண்டியை பணிநீக்கம் செய்யவும், நில அளவைத் துறை உதவி இயக்குநருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

Vignesh

Next Post

அலுவலக வாஸ்து குறிப்புகள்!. இந்த 5 மாற்றங்களை மட்டும் செய்யுங்கள்!. ஒரே இரவில் பண மழை கொட்டும்!

Sun Sep 14 , 2025
வாஸ்து சாஸ்திரத்தில் திசைகள் மிகவும் முக்கியமானவை. வீட்டில் மட்டுமல்ல, அலுவலகத்திலும் வாஸ்து விதிகளைப் பின்பற்றுவது பொருத்தமானதாகக் கருதப்படுகிறது. ஒருவர் தொழிலில் முன்னேற விரும்பினால், அவர் தனது அலுவலகத்தில் இந்த வாஸ்து குறிப்புகளின் உதவியைப் பெறலாம். உங்கள் தொழிலை வெற்றிகரமாக்க விரும்பினால், நிச்சயமாக இந்த வாஸ்து பரிகாரங்களை முயற்சிக்கவும், இதனால் லட்சுமி தேவியே உங்கள் தொழிலில் தனது ஆசீர்வாதங்களைப் பொழிவார், மேலும் நீங்கள் எப்போதும் மகிழ்ச்சி மற்றும் செழிப்பால் சூழப்படுவீர்கள். பெரும்பாலான […]
office vastu tips

You May Like