அரசு முதன்மைச் செயலர் பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ் காலமானார்…! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…!

mks beela Venkatesh 2025

தமிழ்நாடு அரசு எரிசக்தி துறை முதன்மைச் செயலர் பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ். காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு எரிசக்தி துறை செயலாளர் பீலா வெங்கடேசன் உடல்நல பாதிப்பு காரணமாக, கடந்த 2 மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. கொரோனா காலத்தில் தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலராக பணியாற்றியவர் பீலா வெங்கடேசன் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அடிப்படையில் மருத்துவரான பீலா வெங்கடேசன், இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வாகி, பல்வேறு முக்கியத் துறைகளில் செயலாளராகப் பணியாற்றிய அனுபவமிக்கவர்.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் சவால் மிகுந்த மருத்துவத் துறைச் செயலாளராகப் பணியாற்றியவர். மேலும், பல பெரும் பொறுப்புகளில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றிருந்த அவரது அகால மரணம் மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அரசு உயர் அலுவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Vignesh

Next Post

UPI அலெர்ட்!. PhonePe, GPay, Paytm புதிய வங்கி விதிகள்!. நவ.3 முதல் அமல்!. என்னென்ன மாற்றங்கள் தெரியுமா?.

Thu Sep 25 , 2025
நவம்பர் 3 முதல் Gpay, PhonePE, Paytm போன்ற UPI கட்டணங்களுக்கு NPCI அறிவித்த புதிய மாற்றங்கள் என்ன? என்பது குறித்து அறிந்துகொள்ளுங்கள். இந்திய தேசிய கட்டண கழகம் (NPCI) புதிய செட்டில்மெண்ட் முறைமையை அறிவித்துள்ளது, இது UPI (Unified Payments Interface) பரிவர்த்தனைகளுக்காக தயாரிக்கப்பட்டது. இதில், ஒப்புதல் பெற்ற (authorised) மற்றும் சர்ச்சைக்குள்ளான (disputed) பரிவர்த்தனைகள் தனித்தனி சுழற்சிகளாக (separate cycles) செயல்பட உள்ளன. இந்த புதிய விதிமுறைகள் […]
UPI New rule 11zon

You May Like