இன்றைய காலத்தில் பள்ளி மாணவர்கள் முதல் அனைத்து தரப்பினரும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர். இதன் மூலம் அவர்களது படிப்பு, வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. மேலும் தவறானவர்களுடன் ஏற்படும் நட்பு பெரும் விபரீதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அப்படி ஒரு சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் பகுதியில் 17 வயது சிறுமிக்கு இன்ஸ்டாகிராமில் உறவுக்கார இளைஞனிடம் இருந்து பாலோ ரெக்வஸ்ட் வந்துள்ளது. அதனை சிறுமி அஸ்செப்ட் செய்துள்ளார். அதன் பிறகு இருவரும் பேசி வந்துள்ளனர். இந்த நபர் மற்றொரு நபரையும் அந்த பெண்ணுக்கு அறிமுகப்படுத்தி வைத்த நிலையில் அவருடைய சிறுமி சகஜமாக பேசி வந்தார்.
ஒருகட்டத்தில் அந்த இளைஞன் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி தனியாக வரவழைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அதனை சிறுமிக்கு தெரியாமல் வீடியோவாக பதிவு செய்து நண்பர்களுடன் பகிர்ந்துள்ளனர். அதேசமயம் வீடியோவை காட்டி பலமுறை சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் சிறுமியை கர்ப்பமான நிலையில் சிசு கலைக்கப்பட்டது.
இந்த சம்பவம் ஒரு உறவினர் மூலமாக தந்தைக்கு தெரிய வந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தந்தை சிறுமியிடம் இது குறித்து கேட்ட நிலையில் தனக்கு நடந்ததை அழுது கொண்டே கூறியுள்ளார். உடனெ அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த 7 நபர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
பெற்றோர்களே கவனம்: சமூக வலைதளங்கள் அதிகம் பயன்படுத்தப்படும் நிலையில், அதில் உள்ள ஆபத்துகள், தவறான பழக்கவழக்கங்கள், மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தெளிவாகக் கூற வேண்டும். குழந்தைகளுடன் நேரம் செலவழித்து, அவர்களின் மனநிலையைப் புரிந்து வழிநடத்துவதே சிறந்த தீர்வாகும். சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துவது போல், கைபேசியின் பயன்பாடு குழந்தைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடிய முக்கிய காரணியாக மாறியுள்ளதால், பெற்றோர் விழிப்புணர்ச்சியும், பொறுப்புணர்ச்சியும் அத்தியாவசியமாகிறது.