அடிமேல் அடி!. இந்தியாவிடம் தொடர் தோல்வி!. பாகிஸ்தான் கேப்டனுக்கு கிடைத்த தண்டனை!.

salman ali agha

ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவுடனான போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்ததால், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.


17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணியுடன் 3 முறை பாகிஸ்தான் மோதியது. ஆனால், 3 முறையும் பாகிஸ்தான் தோல்வியையே தழுவியது. இதனால், பாகிஸ்தான் அணி கடும் விமர்சனத்திற்கும் ஆளானது. ஏனென்றால் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது நிகழ்ந்த சம்பவங்களை குறிக்கும் வகையில் பாகிஸ்தான் வீரர்கள் செய்த சைகை பெரும் சர்ச்சையை தூண்டின. இதையடுத்து, விருது வழங்கும் விழாவிலும் ரன்னர் அப்-க்கான பேனரை பாகிஸ்தான் கேப்டன் தூக்கி எரிந்து விட்டு சென்றதும் பேசுப்பொருளானது.

இந்தநிலையில், தொடர் தோல்வி காரணமாக சல்மான் அலி அகாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் ஷதாப் கானை டி20 கேப்டனாக நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வரும் 2026ல் இந்தியா மற்றும் இலங்கையில் நடபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை டி20 அணிக்கு சல்மான் அலி அகா, கேப்டனாகவும், துணை கேப்டனாக ஷதாப் கானும் செயல்பட்டு வருகின்றனர். காயம் காரணமாக ஷதாப் கானு சில மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் சில மாதங்களாக அவர் ஓய்வில் இருந்து வருகிறார். இந்தநிலையில், காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் கிரிக்கெட் விளையாடவுள்ளதால், டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் கேப்டனாக ஷதாப் கான் நியமிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Readmore: தமிழகத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை…! இன்று எந்தெந்த மாவட்டத்தில் கனமழை…?

KOKILA

Next Post

குஷி..! டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ் + கருணை தொகை...!

Fri Oct 17 , 2025
மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் தகுதியுடைய கடைப்பணியாளர்களுக்கு 20% வரை போனஸ், கருணை தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் சி, டி பிரிவு ஊழியர்கள், மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் தகுதியுடைய கடைப்பணியாளர்களுக்கு 20% வரை போனஸ், கருணை தொகை வழங்கப்படும். அதேபோல், கூட்டுறவு […]
tasmac 2025

You May Like