ஏகப்பட்ட ஆபாச வீடியோக்கள்.. காதலன் செல்போனை கண்டு ஆடிப்போன பெண்..!! அடுத்து நடந்த பகீர் சம்பவம்..

porn video woman

டெல்லி திமார்பூர் பகுதியைச் சேர்ந்த ராம்கேஷ் மீனா (32) எனும் நபர் தன் வீட்டில் தீக்காயமடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஆரம்பத்தில் இது விபத்து என போலீசார் கருதினர். ஆனால் பின்னர் நடந்த விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தது.


ராம்கேஷ் மீனா ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர். அவர் வசித்த வீட்டில் இருந்து சில மின்னணு சாதனங்கள் மீட்கப்பட்டன. அவருடைய ஹார்ட் டிஸ்கில் 15 பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் இருந்துள்ளது. மேலும் ஒரு பெண் வந்து சென்றதற்கான தடயம் சிக்கியது. இதையடுத்து இது விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என்று உறுதி செய்யப்பட்டது.

விசாரணையில், அவருடன் அம்ரிதா என்ற பெண் லிவிங் பார்ட்னராக வசித்து வந்தது தெரியவந்தது. கடந்த சில மாதங்களாக இவர்களுக்குள் தனிப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டிருந்ததாகவும், அதனால் தகராறு நடந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. அம்ரிதாவிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவரை கொலை செய்ததும், பின்னர் தீ வைத்து விபத்து போல் காட்ட முயன்றதாக ஒப்புக்கொண்டார்.

தகவலின்படி, காதலரின் போனில் நிர்வாண படங்களும் சுமார் 15க்கும் மேற்பட்ட பெண்களின் படங்களும் இருந்ததால் அம்ரிதா அவர்களுடைய படங்களை அழிக்க வலியுறுத்தியும் அவர் அழிக்காததால் அவரை கொன்றதாக கூறியுள்ளார். இந்த வழக்கில் அம்ரிதா மற்றும் அவளது இரு நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லிவிங்க் பார்ட்னரை கொலை செய்து, அதனை விபத்து போல் காட்ட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more: பெண் குழந்தைகள் பிறந்தால் ஆணாக மாற்றும் பெற்றோர்கள்..!! இப்படி ஒரு விநோத பழக்கமா..? எங்கு தெரியுமா..?

English Summary

Many pornographic videos.. The girl who saw her lover’s cell phone and danced..!! The next incident that happened was a ghastly one..

Next Post

மாணவர்களுடன் சிலம்பம் சுற்றி அசத்திய முதல்வர் ஸ்டாலின்.. நீங்களே பாருங்க.. வீடியோ..!

Wed Oct 29 , 2025
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 25-ம் தேதி தென்காசிக்கு செல்வதாக இருந்தது.. ஆனால் கனமழை காரணமாக நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று தென்காசி சென்றுள்ளார்.. தென்காசியில் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அவர் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்க உள்ளார்.. மேலும் 445 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.. மேலும் ரூ.575 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்ட […]
stalin silambam

You May Like