பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்..!! வெளியானது அறிவிப்பு..!! தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்..!!

Thaimaman Thanga Mothiram Thittam 2026

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளங்குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை, வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி மதுரையில் முதல்வர் விஜய் முறைப்படி தொடங்கி வைக்கவுள்ளார்.


முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் தேதியே இத்திட்டம் தொடங்கப்படுவதாக முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும், முதல்வர் விஜயின் வெளிநாட்டுப் பயணம் காரணமாக திட்ட தொடக்க நிகழ்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வரும் செப்டம்பர் 25 அன்று மதுரையில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் முதல்வர் விஜய் இத்திட்டத்தை தொடங்கி வைப்பார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இதேபோல், பள்ளிக் குழந்தைகளுக்கான ‘காமராஜர் காலை உணவுத் திட்டத்தை’ செப்டம்பர் 22-ஆம் தேதி சென்னை திருவான்மியூரில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்க திட்டமிட்டுள்ளார்.

அதேசமயம், சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய செங்கல்பட்டு, திருப்பூர் ஆகிய 2 மாவட்டங்களில் மட்டும் இந்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தற்போது செயல்பாட்டுக்கு வராது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Read More : சிவகங்கையில் இரட்டை கொலை..!! ஓட ஓட வெட்டி சாய்த்த கும்பல்..!! தலை சிதைந்து ரத்த வெள்ளத்தில் பலி..!! பதபதைக்கும் சம்பவம்..!!

Next Post

பொன், பொருளை அள்ளித்தரும் புரட்டாசி..! உங்கள் ராசிக்கு காத்திருக்கும் யோகங்கள்! யாருக்கெல்லாம் ஜாக்பாட்?

Thu Sep 17 , 2026
இந்து சாஸ்திர மரபில் பக்தி நெறியும் ஆன்மீகச் சிந்தனைகளும் மேலோங்கும் உன்னதமான மாதமாக புரட்டாசி விளங்குகிறது. எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனின் பேரருளைப் பெற உகந்த இந்த மாதத்தில், சனிக்கிழமை விரதம், ஆலய வழிபாடு மற்றும் அன்னதானம் செய்வது பெரும் புண்ணியத்தைத் தரும் என்பது நம்பிக்கை. ஜோதிடக் கணிப்புகளின்படி, இந்த புரட்டாசி மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரமானது அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது. குறிப்பாக, சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான தனவரவும் […]
first Saturday of Purattasi

You May Like