தென்காசியில் அரசு சார்பில் நடைபெற்ற நலத்திட்ட வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.. அப்போது திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்ட முதல்வர் தென்காசிக்கான புதிய திட்டங்களையும் அறிவித்தார்..
தொடர்ந்து பேசிய அவர் “ மக்களை மகிழ்க்கவும், காக்கவே, இந்த ஆட்சி, மக்களை வளர்க்கவும், மக்களுக்கு கொடுக்கவுமே இந்த ஆட்சி.. இந்த நான்கையும் 4 ஆண்டுகளாக செய்து வருகிறோம்.. திமுக அரசுக்கு மக்கள் துணையாக இருப்பதால் சிலருக்கு தூக்கம் வருவதில்லை. அதனால் நாள்தோறும் அவதூறுகளை அடித்து விடுகிறார்கள்.. எடப்பாடி பழனிசாமி விரக்தியின் உச்சத்திற்கே சென்று அவதூறுகளை பரப்பி வருகிறார்..
வரலாற்று இல்லாத வகையில் மேட்டூர் அணை தொடர்ந்து நிரம்பி வருகிறது.. மேட்டூர் அணையை முன் கூட்டியே திறந்து வருகிறோம்.. தொடர்ந்து நல்ல மழை பொழிவது நல்லாட்சியின் அடையாளமாக மக்கள் போற்றி வருகின்றனர்.. ஆனால் இதை வைத்தும் சிலர் அரசியல் செய்கின்றனர்.. விவசாயிகளின் நெல்லை அரசு வாங்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி அவதூறு பரப்புகிறார்..
கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளிடம் இருந்து சுமார் 1.7 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.. ஆண்டுக்கு சுமார் 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.. முந்தைய அதிமுக ஆட்சியில் சராசரியாக 22 லட்சம் மெட்ரிக் டன் மட்டும் தான்.. இந்த அடிப்படை கூட தெரியாமல் எடப்பாடி பழனிசாமி பொய் சொல்லி வருகிறார்.. அவரிடம் பொய்யையும், துரோகத்தையும் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.. அவரின் வரலாறே அது தான்..
நெல் கொள்முதலின் ஈரப்பத அளவை 17 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக அதிகரிக்க ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.. கடந்த அதிமுக ஆட்சியில் அக்டோபரில் நெல் கொள்முதல் தொடங்கப்பட்டது.. நமது திராவிட மாடல் ஆட்சியில் செப்டம்பர் மாதமே நெல் கொள்முதல் தொடங்கப்பட்டது..
விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகளை புரோக்கர்கள் என்று கூறியவர் தான் எடப்பாடி பழனிசாமி. தன்னை விவசாயின் என்று சொல்லிக் கொள்ளும் எடப்பாடி தான் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ஆதரித்தார்.
ஆனால் நமது ஆட்சி அமைந்த உடன் இந்த சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தேன்.. மக்களை காக்க வேண்டும் என்று நமது திராவிட மாடல் அரசுக்கு யாரும் சொல்லித்தர தேவையில்லை.. ஒன்றிய அரசு நிதி தராவிட்டாலும் மக்களை காப்பது நமது திராவிட மாடல் அரசின் கடமை..” என்று தெரிவித்தார்..
Read More : தென்காசிக்கு 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.. விவரம் இதோ..



