fbpx

அதிரடி திட்டம்…! I.N.D.I.A கூட்டணியின் அடுத்த பிரதமர் யார்…? வரும் 19-ம் தேதி கூட்டத்தில் முக்கிய முடிவு…!

I.N.D.I.A கூட்டணியின் நான்காவது கூட்டம் டிசம்பர் 19ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.

2024 மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘I.N.D.I.A’ என்கிற கூட்டணியை காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் உருவாக்கியுள்ளன. கூட்டணியின் முதல் மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் நடந்தது.

தெலங்கானா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தலைநகா் டெல்லியில் இந்தியா கூட்டணியின் 4-வது கூட்டம் நடைபெறுவதாக காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டது. முக்கிய தலைவர்கள் பங்கு பெற முடியாத சூழல் நிலவியதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் I.N.D.I.A கூட்டணியின் நான்காவது கூட்டம் டிசம்பர் 19ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் யார், தொகுதி பங்கீடு, சட்டமன்றத் தேர்தல் தோல்விகள், பிரசாரம், சமூக வலைத்தளங்களில் மக்களிடையே விழிப்புணர்வு போன்ற பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளது.

Vignesh

Next Post

மக்கள் செம குஷி...! ரூ.6,000 இல்ல மொத்தம் ரூ.9,000 வழங்கும் தமிழக அரசு...! முழு விவரம் இதோ...

Mon Dec 11 , 2023
சென்னை, திருவள்ளூர் மக்களுக்கு கூடுதலாக 6000 ரூபாய் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக வழங்கப்பட உள்ளது. பெண்களின்‌ வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத்‌ தரத்தை உயர்த்தி, சமூகத்தில்‌ சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும்‌ கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்ட விண்ணப்பங்களைப்‌ பதிவு செய்யும்‌ முகாமை தமிழ்நாடு முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ ஜூன் மாதம் தருமபுரி மாவட்டம்‌, தொப்பூர்‌ அரசு மேல்நிலைப்‌ பள்ளியில்‌ நடைபெற்ற விழாவில்‌ தொடங்கி வைத்தார்‌. உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் இந்த […]

You May Like