fbpx

ஹோட்டல் அதிபர் மற்றும் காதலி படுகொலை.! கணவன் மனைவி வெறிசெயல்.! கொலையில் முடிந்த கள்ளக்காதல்.!

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக ஓட்டல் அதிபர் மற்றும் அவரது காதலி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜோடியிடம் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரை சேர்ந்த ஹோட்டல் அதிபர் ரவி தாகூர் (42) மற்றும் அவரது காதலி சரிதா தாகூர்(38). இவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டு நிர்வாண கோலத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணையில் மம்தா மற்றும் அவரது கணவர் நித்தின் பவார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சியான உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது.

சரிதா தாகூர் தனது தோழியான மம்தாவை காதலன் ரவி தாகூருக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். ஆரம்பத்தில் நட்பாக தொடங்கிய ரவி மற்றும் மம்தாவின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. இது மம்தாவின் கணவர் நித்தினுக்கு தெரியவே தனது மனைவியை கண்டித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து மம்தா ரவியுடன் தொடர்பை துண்டித்துக் கொள்ள முயன்றார். எனினும் ரவி தாகூர் மம்தா உடன் நெருக்கமாக இருந்ததை வீடியோ எடுத்து வைத்து அவரை மிரட்டி கள்ளக்காதலில் இருந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நித்தின் மற்றும் மம்தா தம்பதியினர் ரவி மற்றும் அவரது காதலி சரிதாவை கொலை செய்ய திட்டமிட்டனர். இதனையடுத்து சரிதாவின் வீட்டிற்கு சென்ற அவர்கள் சரிதாவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அவரது காதலன் ரவி தாகூரை வரவழைத்து அவரையும் கொலை செய்து இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து மம்தா மற்றும் நித்தின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெறும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

’2026இல் நான் தான் முதலமைச்சர்’..!! ’என் மனைவி சொல்லிவிட்டார்’..!! - ச.ம.க. தலைவர் சரத்குமார்

Mon Dec 11 , 2023
சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், பிரபல நடிகருமான சரத்குமார் சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் மேடையில் பேசும் போது, என் மனைவி இப்படி சொல்லிவிட்டார். அதனால் நான் 2026இல் முதலமைச்சர் ஆகுவேன் என கூறியிருக்கிறார். தமிழ் சினிமா திரையுலகில் பல வெற்றி படங்களில் நடித்த நடிகர் சரத்குமார் தற்போது தனக்கு முதலமைச்சர் ஆசை வந்துவிட்டதாக பேசியிருக்கிறார். அதாவது “2026ஆம் ஆண்டு நான் கட்டாயம் முதலமைச்சர் ஆவேன் என்று என் மனைவி கூறுகிறார். […]

You May Like