fbpx

மீண்டும் ஒரு கள்ளக்காதல் கொலை.! கல்குவாரியில் பிணமாக மீட்கப்பட்ட 22 வயது இளைஞர்.! 2 பேர் கைது.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத அரசு கல்குவாரியில் 22 வயது இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இது தொடர்பான காவல்துறையின் விசாரணையில் கள்ளத்தொடர்பு காரணமாக கொலை சம்பவம் நடந்தது தெரிய வந்திருக்கிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மூன்றாவது நபர் தலைமறைவாக இருக்கிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசஹள்ளி பகுதியில் மூடப்பட்டிருந்த கல்குவாரியில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இறந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இறந்த நபர் 22 வயதான முத்துமணி என தெரிய வந்திருக்கிறது.

மேலும் கள்ளத்தொடர்பு விவகாரம் தொடர்பாக இவர் கொலை செய்யப்பட்டதும் காவல்துறை விசாரணையில் உறுதியாகி உள்ளது. கொலை செய்யப்பட்ட முத்துமணி கருப்பன் என்பவரது உறவுக்கார பெண்ணுடன் தகாத உறவில் இருந்திருக்கிறார். இது தொடர்பாக கருப்பன் பலமுறை கண்டித்தும் முத்துமணி கேட்கவில்லை. இதனால் முத்துமணியின் உறவினர்களான சரவணன் மற்றும் முத்துக்குமார் ஆகியோரின் உதவியுடன் பயன்பாட்டில் இல்லாத கல்குவாரிக்கு முத்துமணியை அழைத்து வந்து மது குடிக்க வைத்து கொலை செய்து 30 அடி பள்ளத்தில் வீசியது தெரிய வந்திருக்கிறது.

இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக சரவணன் மற்றும் முத்துக்குமார் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளியான கருப்பனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இளைஞர் கொலை செய்யப்பட்டு கல்குவாரியில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

அண்ணன் என்னடா தம்பி என்னடா.? சொத்து தகராறில் படுகொலை செய்யப்பட்ட தம்பி.! அண்ணன்களுக்கு வலைவீச்சு.!

Tue Dec 12 , 2023
திருச்சி அருகே சொத்து பிரச்சனை காரணமாக கூலி தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது . இது தொடர்பாக தலைமறைவாகி இருக்கும் குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள புத்தாநத்தம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முருகேசன். இவரது குடும்பத்திற்கும் இவரது பெரியப்பா ராஜா என்பவரின் குடும்பத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்திருக்கிறது. இது […]

You May Like