தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகளை ஏற்கனவே தொடங்கி விட்டன.. அந்த வகையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.. அதன்படி இதுவரை 73 தொகுதிகளின் திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்..
அந்த வகையில் போடி நாயக்கானூர், சாத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் உடன் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் ஒன் டூ ஒன் ஆலோசனை மேற்கொண்டார்.. அப்போது திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.. மேலும் தமிழக அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் குறித்தும் நிர்வாகிகளுக்கு முதல்வர் சில அறிவுறுத்தல்களை வழங்கினார்..
கலைஞர் உரிமை தொகை பெற தகுதியானவர்களை இடம்பெற செய்ய வேண்டும், அவர்களை அலுவலகத்திற்கு அழைத்து சென்று தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார்.. மேலும் சான்றிதழ்கள், பட்டா சிட்டா உள்ளிட்ட வருவாய் துறை விஷயங்களை பொதுமக்களுக்கு செய்து கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.. தகுதியானவர்களுக்கு விரைவில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்த நிலையில் தற்போது கட்சி நிர்வாகிகளுக்கும் இது தொடர்பான அறிவுறுத்தல்களை அவர் வழங்கி உள்ளார்..
Read More : தவறுதலாக ரூ.1 லட்சம் கோடியை கணக்கில் செலுத்திய வங்கி… அடுத்து என்ன நடந்தது?



