ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக் குழு நிலுவைத் தொகை + பதவி உயர்வு…! அன்புமணி கோரிக்கை…!

3161612 anbumaniramadoss 1

ஏழாம் ஊதியக் குழு நிலுவைத் தொகை, பதவி உயர்வு உள்ளிட்ட அண்ணாமலை பல்கலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ‌


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஏழாம் ஊதியக்குழு பரிந்துரைகளின்படியான நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும், முனைவர் பட்ட ஊக்கத்தொகையை உடனே வழங்க வேண்டும், பதவி உயர்வுகளை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட 8 கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் கடந்த 10-ஆம் தேதி முதல் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்று போராட்டம் நீடிக்கும் நிலையில், அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்துவதற்குக் கூட அரசோ, பல்கலைக்கழக நிர்வாகமோ எந்த முயற்சியும் மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது.

அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஏழாம் ஊதியக் குழு பரிந்துரைகளின்படியான ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்குவதில் அரசும், பல்கலைக்கழகமும் இழைக்கும் துரோகங்கள் மன்னிக்க முடியாதவை. தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பேராசிரியர்களுக்கு ஏழாம் ஊதியக் குழு பரிந்துரைப்படியான ஊதிய உயர்வு 2018-ஆம் ஆண்டு ஜூலை 6-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, அதுவரையிலான ஊதிய உயர்வு நிலுவைத்தொகை வழங்கப்பட்டு விட்டது.ஆனால், அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு இன்று வரை ஊதிய உயர்வு நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. இது சம நீதிக்கு எதிரானது.

அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு மட்டும் அது மறுக்கப்படுவது நியாயமல்ல. அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்களின் மற்ற கோரிக்கைகளும் நியாயமானவை. அவை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தான் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வருவதற்கு துணையாக நின்றார்கள். ஆனால், தீட்டிய மரத்தில் கூர் பார்ப்பதைப் போல அவர்களையே திமுக அரசு பழிவாங்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் போக்கை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்; அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Vignesh

Next Post

உங்க டாய்லெட்டில் மஞ்சள் கறை போகமாட்டீங்குதா?. வாழைப்பழம் போதும்!. 2 நிமிடங்களில் க்ளீன் ஆகிடும்!.

Sat Nov 15 , 2025
குளியலறைகள் ஆரோக்கியத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. எனவே, உங்கள் கழிப்பறை பகுதியை சுத்தமாகவும், பளபளப்பாகவும் வைத்திருப்பது மிகவும் முக்கியம். இன்று, பிடிவாதமான கறைகளை நீக்கி, உங்கள் குளியலறையை பளபளப்பாக மாற்றுவது எப்படி என்பது குறித்து தெரிந்துகொள்வோம். குளியலறை இருக்கையில் உள்ள பிடிவாதமான மஞ்சள் கறைகள் நூற்றுக்கணக்கான முயற்சிகளுக்குப் பிறகும் நீங்குவதில்லை. ஆனால் பிடிவாதமான கறைகளை அகற்றுவதற்கான சிறந்த வழி உங்கள் கண்களுக்கு முன்பாகவே உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? சிலர் அதை […]
toilet cleaning

You May Like