வணிகம் மற்றும் தொழிற்சாலை துறையின் கீழ் செயல்படும் ரப்பர் வாரியம், கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 51 காலிப்பணியிடங்கள் தற்போது நிரப்பப்படுகின்றன.
பணியிட விவரம்:
- விஞ்ஞானி பதவியில் A, B, C என மொத்தம் 29 பணியிடங்கள் உள்ளன.
- புள்ளியியல் ஆய்வாளர் – 2,
- எலக்ட்ரீசியன் – 3,
- அறிவியல் உதவியாளர் – 10
- உதவி இயக்குநர் – 1,
- மெக்கானிக்கல் பொறியாளர் – 1,
- இந்தி டைப்பிஸ்ட் – 1,
- ஜூனியர் டெக்னிக்கல் அதிகாரி – 1,
- சிஸ்டம் உதவியாளர் – 1,
- விஜிலென்ஸ் அதிகாரி – 1
வயது வரம்பு:
- விஞ்ஞானி பதவிக்கு அதிகபடியாக 35- 40 வயது வரை இருக்கலாம்.
- உதவி இயக்குநர், மெக்கானிக்கல் பொறியியல் பதவிக்கு 40 வயது வரை இருக்கலாம்.
- விஜிலென்ஸ் அதிகாரி பதவிக்கு 50 வயது வரையும் இருக்கலாம்.
- புள்ளியியல் ஆய்வாளர் மற்றும் டைபிஸ்ட் பதவிகளுக்கு 27 வரை இருக்கலாம்.
- இதர பதவிகளுக்கு 30 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி:
விஞ்ஞானி பதவி: ரிமோட் சென்சிங், புவியியல், இயற்பியல், சுற்றுச்சுழல் அறிவியல், பேரிடர் மேலாண்மை, விவசாயம், தோட்டக்கலை, புவி-தகவல், வாழ்க்கை அறிவியல், தாவரவியல், பயோடெக்னாலஜி, உயிரியல், ரப்பர் தொழில்நுட்பம், பயிர் மேனேஜ்மெண்ட் ஆகியவை மற்றும் இவற்றை சார்ந்த படிப்புகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
உதவி இயக்குநர்: கணினி அறிவியலில் பிஇ/ பி.டெக் அல்லது கணினி பயன்பாட்டில் முதுகலை பட்டம் உடன் 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மெக்கானிக்கல் பொறியாளர்: மெக்கானிக்கல் பொறியியல் பட்டப்படிப்புடன் 6 வருட அனுபவம் தேவை.
புள்ளியியல் ஆய்வாளர்: இளங்கலை பட்டப்படிப்பு, விவசாய புள்ளியியல், பொருளாதார அளவியல் அல்லது கணிதத்தில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.
எலக்ட்ரீசியன்: 10-ம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ உடன் 2 ஆண்டு அனுபவம் தேவை.
அறிவியல் உதவியாளர்: தாவரவியல், வேதியியல், விலங்கிய ஆகியவற்றில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
இந்தி டைப்பிஸ்ட்: சிவில் டிப்ளமோ உடன் 5 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஜூனியர் டெக்னிக்கல் அதிகாரி: 10ஆம் வகுப்பு, ஐடிஐ மற்றும் 2 ஆண்டு அனுபவம்.
விஜிலென்ஸ் அதிகாரி: பிரநித்துவ அடிப்படையில் நிரப்பப்படும்.
சம்பளம்: பதவிக்கு ஏற்ப சம்பள நிர்ணயிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் நிலை 2 (ரூ. 5,200 – 20,200) முதல் நிலை 10 (ரூ.15,600 – 39,100) வரை வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? ரப்பர் வாரியத்தில் வெளியாகியுள்ள 51 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனாக விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் லிங்கை https://recruitments.rubberboard.org.in/ என்ற இணையதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம்.
Read more: நாடு முழுவதும் இ-பாஸ்போர்ட் அறிமுகம்: பழைய பாஸ்போர்ட்க்கும் இவற்றுக்கும் என்ன வித்தியாசம்?



