என்ன நடிப்புடா சாமி.. கணவனை போட்டு தள்ளிவிட்டு 5 வருடமாக நாடகமாடிய மனைவி..! சிக்கியது எப்படி..?

affair murder 1

கர்நாடக மாநிலம் களபுறகி மாவட்டத்திலுள்ள கன்னி கிராமத்தை சேர்ந்தவர் பீரப்பா. இவருடைய மனைவி சாந்தாபாய். பீரப்பா கடந்த 7 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், மனைவி கணவனை கூலிப்படை ஏவி கொலை செய்தது 7 வருடங்களுக்கு பிறகு தெரியவந்தது.


தகவலின்படி மனைவி சாந்தாபாய்க்கும் அதே கிராமத்தை சேர்ந்த நபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துவந்துள்ளனர். இந்த விஷயம் கணவன் பீரப்பாவிற்கு தெரியவரவே மனைவியை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகறாரு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சாந்தாபாய் கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார்.

பிறகு அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக கூறி நாடகமாடி கணவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை நம்ப வைத்துள்ளார். இந்நிலையில் கூடை படையினருக்கு சாந்தா பாய் பணம் கொடுக்காமல் இருந்த நிலையில் அவர்கள் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டு வந்துள்ளனர். சாந்தா பாய் பணம் தர மறுத்ததால் அவருடடான செல்போன் உரையாடலை கூலிப்படை ரவுடி இணையத்தில் பதிவிட்டார்.

அந்த ஆடியோ வைரலானதை தொடர்ந்து பீரப்பாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சாந்தா பாயை பிடித்து விசாரணை செய்ததில் தன் கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்துள்ள போலீசார் நான்கு பேர் கொண்ட கும்பலையும் கைது செய்துள்ளது. , மனைவி கணவனை கூலிப்படை ஏவி கொலை செய்த சம்பவம் 7 வருடங்களுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more: ரூ. 2,08,700 வரை சம்பளம்.. சென்னையில் மத்திய அரசு வேலை.. M.Tech / M.E முடித்தவர்களுக்கு ஜாக்பாட்..!!

English Summary

A wife who has been acting out for 5 years after abandoning her husband..! How did she get caught..?

Next Post

உங்க வீட்டு பாத்ரூம் கதவு தண்ணீர் பட்டு சேதமடைகிறதா..?அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

Sun Nov 23 , 2025
Is your bathroom door damaged by water? Then try this!
bathroom door dirty

You May Like