மத்திய அரசு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!

School Money 2025

பள்ளி மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான பிஎம் யாசஸ்வி திட்டத்துக்கு, விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.


பிஎம் யாசஸ்வி திட்டத்தின் கீழ், பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் படிக்கும் ஓபிசி, இபிசி, டிஎன்டி பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும், ரூ.4 ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.நடப்பாண்டு புதுப்பித்தல் மற்றும் புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

இதுகுறித்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை இயக்குநரகம் சார்பில், மாவட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்: பிஎம் யாசஸ்வி திட்டத்தின் கீழ், பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் படிக்கும் ஓபிசி, இபிசி, டிஎன்டி பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும், ரூ.4 ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

நடப்பாண்டு புதுப்பித்தல் மற்றும் புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து, தகுதியான மாணவர்கள் https://scholarships.gov.in என்ற இணையவழியில் துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். பள்ளி அளவில் விண்ணப்பங்களை சரிபார்க்க வரும் 31-ம் தேதி கடைசி நாளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

குறைவான நேரம் தூங்குறீங்களா..? அப்போ கஜினி சூர்யா மாதிரி எல்லாமே மறந்துடுவீங்க..! டாக்டர் வார்னிங்..

Mon Dec 15 , 2025
Are you sleeping less? Then you will forget everything like Ghajini Surya! Doctor Warning..
sleep less 1 1

You May Like