Breaking : ஒரே நாளில் ரூ.7,600 குறைந்த தங்கம் விலை..! வெள்ளி விலை ரூ.55,000 சரிவு.. மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!

ChatGPT Image Jul 1 2025 09 24 01 AM 1 1

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது..

இந்த நிலையில் சென்னையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அந்த வகையில், இன்று காலை சென்னையில் ஆபரணத்தங்கம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.950 குறைந்து ரூ.14,900க்கு விற்பனையாகிறது.. இன்று காலை சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ரூ.1,19, 200க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல் இன்று வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்துள்ளது… அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.55 குறைந்து ரூ.350க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.55,000 குறைந்து ரூ.3.50 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : வருமான வரி முதல் தங்கம் விலை வரை..!! நாளை தாக்கல் ஆகும் பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்திற்கு காத்திருக்கும் ஜாக்பாட்..?

RUPA

Next Post

இந்த உணவுகளை சாப்பிடுவதை உடனடியாக நிறுத்துங்க..! இல்லையெனில் உங்களுக்கு புற்றுநோய் வரும் ஆபத்து உள்ளது!

Sat Jan 31 , 2026
நாம் உண்ணும் உணவு நமது பசியைத் தணிப்பதற்காக மட்டுமல்ல, நமது எதிர்கால ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கிறது. ஆனால், பல நேரங்களில் நாம் சுவையின் வலையில் சிக்கி, நமது ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் உணவுகளில் மூழ்கிவிடுகிறோம். இத்தகைய பழக்கங்கள் புற்றுநோய் போன்ற அபாயகரமான நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே, சில வகை உணவுகளைத் தவிர்த்து, சத்தான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது புற்றுநோயின் அபாயத்தை ஓரளவிற்கு குறைக்க உதவும். அப்படியானால், அந்த அச்சுறுத்தலைத் தவிர்க்க நாம் என்ன […]
cancer

You May Like