ஷாக்கிங் நியூஸ்..! ஊட்டி, கொடைக்கானலில் பாக்கெட் பாலுக்கு தடை..! சென்னை ஐகோர்ட் புதிய உத்தரவு..!

chennai high court 11zon

சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், பாக்கெட் பால் விற்பனையை தடுத்து தானியங்கி பால் விற்பனை இயந்திரங்களை அமைக்குமாறு தனியார் பால் நிறுவனங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.


முன்னதாக, மலைப்பிரதேசங்களில் பிளாஸ்டிக் தடையை முழுமையாக அமல்படுத்தக் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு, பிளாஸ்டிக் கவர்களில் பால் விநியோகம் செய்வதற்கு மாற்றாக புதிய வழிகளைக் கண்டறிய அறிவுறுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, ஆவின் நிறுவனம் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் சோதனை அடிப்படையில் தானியங்கி பால் விற்பனை இயந்திரங்களை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுத்தது.

இந்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சோதனை முறையில் கொடைக்கானலில் முதல் இரு நாட்களில் 40 லிட்டர் பாலும், ஊட்டியில் வெறும் 6 லிட்டர் பாலும் மட்டுமே தானியங்கி இயந்திரங்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த புள்ளிவிவரங்களைக் கவனித்த நீதிபதிகள், புதிய தானியங்கி முறை குறித்து பொதுமக்களிடமும் சுற்றுலாப் பயணிகளிடமும் போதிய விழிப்புணர்வும் விளம்பரமும் செய்யப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி அதிருப்தி தெரிவித்தனர்.

தொடர்ந்து உத்தரவிட்ட நீதிபதிகள், தானியங்கி இயந்திரங்கள் குறித்து விரிவான விளம்பரங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும், இந்த இயந்திரங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ள பகுதிகளில் பாக்கெட் பால் விற்பனையை முற்றிலும் நிறுத்த வேண்டும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். மேலும், ஆவின் நிறுவனத்தை தொடர்ந்து தனியார் பால் நிறுவனங்களும் மலை வாசஸ்தலங்களில் தங்களது சொந்த தானியங்கி பால் விற்பனை இயந்திரங்களை நிறுவ வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Read More : ரூ.20 கோடி வரை ஏமாந்த மக்கள்..! ஏஜெண்டுகளின் வீடுகள் சூறை..! போலீஸ் வாகனங்கள் மீது கல் வீச்சு..! பரபரப்பு.. பதற்றம்..!

Next Post

600 உயிர்களை பலிவாங்கிய பெரு வெள்ளம்!. 100 பனிப்பாறை ஏரிகள் உடையும் ஆபத்து!. நேபாளத்தில் தணியாத வெள்ள அபாயமும் தொடரும் தேடுதலும்!

Sat Aug 29 , 2026
நேபாளம் மற்றும் சீனாவில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமையன்று 586 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2,400-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. நிலையற்ற தடுப்பு ஏரிகளால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்ற அபாயத்திற்கு மத்தியிலும், மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையத் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். நேபாளத்தின் எட்டு மாவட்டங்களில் 579 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திபெத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். நேபாளத்தில் […]
nepal 600 dead 30kb

You May Like